ஸக்கீருக்கு எதிரான இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ், அவசரப்படப் போவதில்லை என்று நம்ம ஐஜிபி கூறுகிறார்

 

igpஇஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீருக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிடுவது பற்றி இந்தியா ஆலோசித்து வருவது பற்றி கருத்துரைத்த மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார், “நாங்கள் அவசரப்படப் போவதில்லை, அது நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம்”, என்றார்.

ஸக்கீர் அவரது பேச்சின் மூலமாக வெறுப்பு உணர்வைத் தூண்டி விடுவதுடன் பயங்கரவாதத்திற்கும் தூபமிடுகிறார் என்பதற்காக அவரை இந்தியா விசாரிக்க விரும்புகிறது.

ஆனால், இப்போது மலேசியாவில் நிரந்தமாகத் தங்கும் உரிமை பெற்றுள்ள ஸக்கீர், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றால் தம்மை சித்திரவதைக்கு ஆளாக்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த விசாரணை விவகாரத்தில் மலேசியா இந்தியாவுடன் பரஸ்பர சட்ட உதவி வழியாக ஒத்துழைக்கும் என்றும் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.