1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சியிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் அந்த 17 பேரும் யார் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்துறை தலைவர் முகமட் அப்பாண்டி அலி வெளியிட்ட பிதமர் நஜிப் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறும் ஆவணத்தின் அடிப்படையில் ரஃபிஸி இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி ஆகியவற்றிலிருந்து பணம் வெளியேறுவது சம்பந்தமாக பல செய்திகளும் விசாரணைகளும் இருந்த போதிலும், இன்று வரையில் KWAP என்ற ஓய்வூதிய நிதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பணத்தைப் பெற்ற 17 பேர் பற்றிய தகவல் ஏதுமே இல்லை என்பதை ரஃபிஸி சுட்டிக் காட்டினார்.
“இந்தப் பணத்தைப் பெற்ற அவர்கள் யார்? அதை அவர்கள் ஏன் பெற்றுக்கொண்டார்கள்? அவர்கள் ஏன் பிரதம மந்திரியிடமிருந்து பணம் பெற்றனர்?”, என்று ரஃபிஸி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
KWயிடமிருந்து எஸ்ஆர்சி கிட்டத்தட்ட ரிம4 பில்லியன் கடன் பெற்றுள்ளது.