மலேசியர்கள் உயர் பண்பாளர்களாக திகழ வேண்டும் அப்போதுதான் உலகம் மலேசியாவை மதிக்கும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுவதைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
1எம்டிபி மோசடியைச் சுட்டிக்காட்டிய அவர், நஜிப் நல்ல தலைவராக இருந்து வழிகாட்டத் தவறிவிட்டார் என்றும் “பணம்தான் எல்லாம்” என நம்பி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
“மலேசியர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போது தங்களை மலேசியர்கள் என்று ஒப்புக்கொள்ளவே வெட்கப்படுகிறார்கள். நஜிப்பின் 1எம்டிபி-இல் ஏற்பட்ட பல பில்லியன் ரிங்கிட் இழப்பு, பணச் சலவை நடவடிக்கைகள், பில்லியன் கணக்கான ரிங்கிட் அவருடைய வங்கிக் கணக்கில் காணப்பட்டது எல்லாமாகச் சேர்ந்து மலேசியாவின் பெயரைக் கெடுத்து விட்டன”, என மகாதிர் அவருடைய வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.
“இதையும்விட மோசமானது அவர் இன்னமும் பிரதமராக இருப்பது. தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக சந்தேகம் வந்து விட்டாலே பதவிநீக்கம் செய்யப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள்.
“ஆனால், மலேசியாவில் நஜிப் பத்திரமாக உள்ளார், நேர்மையாக இருக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொள்கிறார், ஊழல்மிக்க இந்நாட்டை உலகம் மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்”, என்று மகாதிர் கூறினார்.
1எம்டிபி விவகாரத்தில் தவறு செய்ததாக கூறப்படுவதை நஜிப் திரும்பத் திரும்ப மறுத்து வந்துள்ளார். சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலியும் நஜிப் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவரை எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் கடந்த ஆண்டு விடுவித்தார்.
திருட்டு ஊழல்வாதிகள் எல்லாம் நமக்கு புத்தி கூறும் காலமிது– அல்தான்துயா நம்பிக்க்கை நாயகனின் அறிவுரை யாருக்கு தேவை என்று அவனுக்கே தெரியும்.
உம்மையே சில அடிவருடிகள் வாழ்த்திப் பேசும் கொடுமையை ஊடகங்களில் பார்த்தும், கேட்டும் கடுப்படையும் கொடுமையோடு ஒப்பிடுகையில் இது ஒன்றும் அத்தனை பெரிய கொடுமையல்ல !! பதவிக்காக நீர் செய்ததை, பணத்திற்காக அவர் செய்யும்போது அது பெரிய அபத்தமாய் தோன்றுகிறது அல்லவா ? எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே !!