பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சியை நிறுவியர்களில் ஒருவர் இன்று அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கமருல்சமான் ஹபிபுர் ரஹ்மான் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மற்ற பதவிகளிலிருந்தும் விலகிக்கொண்டிருக்கிறார்.
“நெகிரி செம்பிலான் தொடர்புக்குழுத் தலைவர் பொறுப்பு எனக்கு வேண்டாம். மத்திய நிலையில் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டேன்.
“உச்சமன்ற உறுப்பினர் பதவியையும் உதறி விட்டேன். முடிவாக, பெர்சத்து உறுப்பினராகக்கூட இல்லாமல் விலகிக் கொள்கிறேன்”, என கமருல்சமான் கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
எதிர்கட்சிகளில் பெரும்பாலும் உண்மையாயன கட்சி தொண்டர்களையும், தியாகிகளை தூக்கி எரிந்து, கைக்கூலிகளையும், காக்கா பிடிப்பவர்களை கட்சியின் உயர் பதவிகளில் அமரச் செய்வதினால் ஏற்படும் விளைவுகளே இவை. தற்போது எதிர்க்கட்சிகளும் நாரிப் போய் உள்ளது.