மே 23இல், கேமரன் மலையில் காய்கறி பயிர் செய்யும் 100 பேர், பாகாங் அரசு தங்களுக்கு நிரந்தர நிலாப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குவாந்தானில், விஸ்மா ஸ்ரீபாகாங்கில் குந்தியிருப்புப் போராட்டம் நடத்துவர்.
“வெற்று வாக்குறுதிகளில் எங்களுக்கு அக்கறை இல்லை. பத்தாண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், மேலும் பேச்சு நடத்த விருப்பமில்லை”, என பி.சுரேஷ் கூறினார். சுரேஷ், கேமரன் மலை பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)வின் நில, வீடமைப்பு, கடை விவகாரக் குழு (ஜேடிஆர்ஜி) உறுப்பினர்.
ஜேடிஆர்ஜி கேமரன் பாதிப்புக்கு உள்ளானதாகக் கருதப்படும் 500- விவசாயிகளில் 20-க்கு மேற்பட்டவர்களைப் பிரதிநிதிப்பதாக அவர் சொன்னார்.
இந்த பி.எஸ்.எம். கட்சியை சேர்ந்த சுரேஷ் என்கிற இந்த இளைஞர் , நல்ல சேவையாளர்.சென்ற பொதுத்தேர்தலில் டி.ஏ.பி. சார்பாக ஓர் உதவாக்கரையை நிற்க வைத்தது டி.ஏ.பி. இம்முறை இந்த சுரேஷிற்கு வழிவிட்டு, கேமரன் மலையில் டி.ஏ.பி.ஒதுங்கி கொள்வது நல்லது.
தோலை நோக்கு இல்லா சம்பந்தனால் வந்த வினை. அம்னோ நாதாரிகளுக்கு நாம் வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன?
தங்களின் கோரிக்கை நிறைவேறட்டும் சுரேக்ஷ், பாராட்டுக்கள் 🙂
ஐயா! சம்பந்தனை குறைசொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை! நாம் இழந்தது அனைத்தும் சாமிவேலு காலத்தில்! அதைவிட, நாம் தலைவர்களை நம்பியதால் அதிகம் கெட்டோம்!
ஐயா abraham terah அவர்களே- சம்பந்தனுக்கு தொலை நோக்கு கிடையாது என்பது வெள்ளிடை மலை. சம்பந்தன் துங்குவை நம்பியது மிகவும் தவறு–எழுத்து பூர்வமாக ஒன்றும் இல்லை. HINDRAF -ன் 18 அம்சம் கோரிக்கை என்று நினைக்கிறேன் -அதற்க்கு தான் லண்டனுக்கு போனார்கள் அல்லவா? ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
அய்யாசாமி நம்மை அதலபாதாளத்தில் தள்ளியதும் உண்மை– காக்கா அதற்க்கு பெரும்பங்கு ஆற்றியதும் உண்மை. இன்று நாம் ஓரங்கட்டப்பட்டு ஒற்றுமை இல்லாமல் அல்லல் படுவதும் உண்மை. நல்ல தலைமைத்துவம் இல்லாததும் உண்மை. உண்மைக்கு காலம் இல்லை என்பதும் உண்மை.
சம்பந்தன் வாழ்ந்த காலத்தில் 90 சதவிகிதம் நாம் தோட்டப்புற தொழிலார்கள் ! எஸ் . எஸ் . ரஸுல கப்பலில் இலவசமாக இந்தியா திரும்பி செல்வதர்கு நம்மவர்கள் தயாராக இருந்த காலம் ! அந்த சூழ் நிலையிலும் பத்து பத்தாக சேர்த்து தமிழன் தலைநகரில் தலை நிமிர ஒரு கூட்டுறவு கழகம் ! தானை தலைவன் கோடி கோடி யாக சேர்த்து இந்த நாட்டு தமிழனை பொருளாதாரத்தில் உச்சத்தில் கொண்டு வைக்கிறேன் என்று தமிழனுக்கு நாமம் போட்டு இன்று சொகுசாய் வாழ்ந்து கொண்டிருப்பவனின் மயிரை எவனும் புடுங்க முடியவில்லை ! சம்பந்தனை குறை கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது !
பி . எஸ் . எம் . !! டி . எ .பி . !! பி .கே .ஆர் . !! ம . இ . க . !! எவனும் இந்த சமுதாயத்திற்கு உதவ முன் வரவில்லை ! தொகுதி வேண்டும் , நாளு காசு சேர்க்க வேண்டும் ! சொகுசாக வாழவேண்டும் !!
சம்பந்தன் காலத்தில் பிரஜா உரிமை எடுப்பதில் எந்தப்பிரச்சனையும் இருந்ததில்லை. அடையாளக்கார்டுகள் எடுக்கும் போது தோட்டங்களைத் தேடி வந்தார்கள். சம்பந்தன் அவர் காலத்தில் ஏல்லாமே எளிய முறையில் அமையுமாறு பார்த்துக் கொண்டார். அவர் கட்டியது தான் ம.இ.கா. கட்டிடம். அவர் கட்டியது தான் கூட்டுறவு சங்கத் கட்டடம். நிச்சயமாக அவர் ஒரு சாதனை மனிதர்.
abraham terah உங்களின் வயது என்ன இப்போது? இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனைக்கும் ச____னார் தான் காரணம் என்பது கசப்பான உண்மை என்பது உமக்குத் தெரியுமா? தெரியாதென்றால் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் கேட்கவும்.
அவரை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை– ஆனால் ஒரு தலைவனுக்கு இருந்த சாதனை என்று என்னால் கூற முடியாது. என்னைப்பொறுத்தமட்டில் லீ குவான் யு போன்ற தலைவர்களை தான் சாதனை யாளர் என்று கூற முடியும், ஆனால் நம்மவர்கள் முன்னேற வேண்டும் என்று எண்ணியவர் அவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். தேசிய நில கூட்டுறவு நம்மவர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறது? அது 50 களில் ஆரம்பிக்கப்பட்டது– இருந்தும் இதுவரை எத்தனை தோட்டங்கள் வாங்கப்பட்டன? அதை அதை நிறுவகிப்பவர்கள் யார்? பங்குதாரர்கள் எவ்வளவு பயன் அடைந்தார்கள்?
ஐயா s maniam அவர்களே. பாதிக்கப்பட்ட யாருக்கும் குறை கூற தகுதி இருக்கிறது. குறை காணாமல் ஒன்றும் முன்னேற்றம் காண முடியாது– ஆனால் வெறுமனே குறை கூறி மட்டம் தட்டுவது தவறு என்பது எனது தாழ்மையான கருத்து. நம் கலாச்சாரத்தில் துதிபாடுவது என்பது இரண்டறக்கலந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறிது கவனித்தீர்கள் என்றால் புரியும்– எந்த தமிழ் நாட்டு கூட்டத்திலும் துதி பாடுதலை நாம் பார்க்கமுடியும்.இன்னும் எவ்வளவோ–
ஐயா abraham terah அவர்களே– எல்லா தலைவலியும் 1969 க்கு பிறகே. காரணம் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதற்க்கு பிறகு சம்பந்தன் நிலை………………………?
பிஜி தீவுகளின் சுதந்திர சமயத்தில், அந்த நாடு அரசிய சாசனத்தை உருவாக்க மலேஷியா சார்பில் இந்த சம்பந்தன்தான். சென்றார். அந்த வேளையில் பிஜியில் மக்கள் தோகையிலும் இந்தியர்கள் அதிகமாக இருந்து தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை ஆண்டு வந்தனர். அந்த இந்தியர்களுக்கும் அந்த நாட்டு அரசியல் சாசனத்தில் இந்தியர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டார். அரசு சட்டங்கள் தெரியும் வரையில் இந்தியர்கள் வழக்கம்போல அரசை நடத்தினர். அந்நாட்டு குடிகள் எப்பொழுதும் முட்டாள்களாக இருப்பார்களா? Sathveni Rabukka என்றவர் சட்டம் கற்று, நாட்டின் சட்டத்தை ஆழ்ந்து தெரிந்து அவர்களுக்கு பிரத்தியோக உரிமை இருப்பதை கண்டு செயலில் இறங்கினார். முடிவு முறையாக தேர்வு செய்யப்பட்ட சௌத்திரியும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலையில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய பெருமை துன் சம்பந்தனாரையே சேரும். துன் நமது முன்னோர்களின் கூற்றுபோல எதிலும் நீதி நேர்மை ஆகிவைகளுக்கு முதலிடம் கொடுத்து நமது உரிமையையும் இழந்து தவிக்கிறோம். மற்றவர்கள் எவ்வளவு சாதுரியமாக நமது உழைப்பை பெற்றுக்கொண்டு இறுதியில்நம்மை தவிக்க விட்டார்கள். ஒருகால் துங்குவும் சம்பந்தனும் இன்றும் உயிருடனும் செயலோடும் இருந்தால் நமக்கு .கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைத்திருக்க கூடும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறைவு உண்டு ஆக நமக்கும் நமது சந்ததிக்கும் கிடைக்கவேண்டிய சலுகைகளை எழுத்து வடிவில் எழுதி முத்திரையிட்டுருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் பிரஜைகளாக கொள்ளப்படவேண்டும் என்றொரு நிபந்தனை இட்டனர். அவர்களின் கூற்றுப்படி ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நாட்டின் சலுகைகளை எவ்வித ஏற்றத்தாழ்வின்றி பெறவேண்டும். இன்றும் அவர்கள் நாட்டில் சமீபத்தில் குடியுரிமை பெற்றவரானாலும் அவர்களுக்கும் எல்லா உரிமையும் பாகுபாடின்றி வழங்குகின்றார்கள். ஆனால் இங்கு எப்படி இருக்கிறது.? எதிலும் தூர நோக்கு வேண்டும். நாம் யாரோடும் எவ்வகையிலும் போட்டிபோட தயார். ஆனால் போட்டியின் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். எமக்கு தனி சலுகை தேவையில்லை காரணம் எம்மிடம் திறமையுண்டு. நாமும் வாழ்வோம் நம்மோடு நம்மை சுற்றியுள்ள அனைவரையும் வாழவைப்போம், வாழவிடுவோம்.. இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
சாக்ரடிசு, சம்பந்தன் காலத்தில் அவரை எனக்குப் பிடிக்கவில்லை! அவர்க்குப் பிறகு வந்த அரசியல்வாதிகளை பார்க்கும் போது சம்பந்தன் மகத்தான மனிதர் என்பது இப்போது புரிகிறது!
abraham terah அவர்களே , நான் மலேஷியா அரசியல் அமைப்பு சாசனத்தை பல முறை புரட்டி பார்த்திருக்கிறேன். அதில் இந்தியர்கள் அல்லது சீனர்கள் என்று எங்குமே எழுதவில்லை ! மாறாக இஸ்லாமியர்கள் மற்றும் மற்றவர்கள் என்றுதான் உள்ளது … துன் சம்பந்தம் சட்டம் படிக்காதவர் . இருப்பினும் , இந்தியர்களின் ஒரே தலைவர் என்னும் மாயையை நம் கண்முன்னே காட்டி , நயவஞ்சகம் ஆடியது UMNO . இப்படி தான் இலங்கையை ஆண்ட பிரிட்டன், அங்கிருந்து வெளியேறும் பொழுது தமிழர் நிலங்களை சிங்களவர்கள் நிலங்களுடன் ஒன்றிணைத்து , ஒட்ரை நாடாகியது. இங்கிருந்தே குழப்பங்கள் நீடித்தன …. இதை எதிர்த்த தந்தை செல்வநாயகம் தனது பார்லிமென் பதவியை துறந்தார் …. அப்படி செய்யவில்லையே இந்த அரசியல் சாசனம் விளங்காத துன் சம்பந்தன் அவர்கள் … ! எல்லாம் அரசியல் செய்தார்களே தவிர பி.உதயகுமார் போல் தூரநோக்கு சிந்தனை இல்லை என்பதை மறுக்க முடியாது ! மேலே எழுதும் அன்பர்கள் நாகரிகமாக கருத்தை தெரிவிக்கின்றனர் … நானாக இருந்தால் …… சரி விசயத்திற்கு வருவோம் … முதலில் இந்த மா இ கா நிற்கும் எல்லா இடங்களிலும் நம்மை போன்ற தன்னலமற்றவர்கள் , இந்தியர்கள் வாக்குகளை இவர்களுக்கு கிடைக்காமல் செய்து , சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்போம் ! அப்பொழுதுதான் எந்த அரசாங்கம் வந்தாலும் , ஏதாவது தமிழனுக்கு கிடைக்கும் ! இல்லையேல் இந்த மா இ கா நம்மை காட்டி காட்டி , அவர்கள் ஏப்பம் விடுவார்கள் … இதை முறியடிக்க வேண்டும் … இதுவே காலம் நமக்கு அளித்திருக்கும் ஒரே வாய்ப்பு …… நாம் இறந்தாலும், ஜனநாயகத்திற்கு நம் பங்கை ஆட்ரி யுள்ளோம் என்று கடவுளின் முன் கால் மேல் கால் போட்டு உக்காரலாம் …. இல்லை என்றால் வாயிலையே வடை சுட்ட அறையில் , நரகத்தில் தள்ளி விடுவார்கள் …. எது வேண்டும் உங்களுக்கு ?
சம்பந்தனை அப்போது எதிர்த்தேன். இப்போது அவர் செய்தது சரிதான் என்று எனது கருத்தை மாற்றிக் கொண்டேன். அப்போது சாமிவேலுவை ஆதரித்தேன். இப்போது ஒரு மாபெரும் தமிழர் துரோகியை ஆதரித்தோமே என்று இப்போது கருத்தை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் இப்போது ம.இ.கா. வை நான் ஆதரிக்கவில்லை! நீங்கள் சொல்லுவது போல அரசியல் அமைப்புச் சட்டத்தை எல்லாம் நுணுகி ஆராயவில்லை! இப்போது அது எனக்கு தேவை இல்லாமல் போய்விட்டது!
சரி இங்கே கேள்வியாதெனில் , அடுத்தது என்ன ?
இன்று அரசுக்கு எதிராக போராட்டம், தேர்தல் நேரத்தில் அரசுக்கு ஆதரவு என இவர்களது கொசுக்கடி தாங்க முடியலே.
இதற்கிடையில் தேவையில்லாமல் ஏன் சம்பந்தனை கோத்து விடுவது தேரை இழுத்து தெருவில் விடுவதுபோல்.
நம்ம கொஞ்சம் நேரம் கலகலப்பான அரசியலுக்கு போவோம்.
அம்னோ மாநாட்டில் இனிவரும் காலங்களில் அரசியலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளதால், RAHMAM எழுத்திற்கேட்ப நாஜிப்போடு ஆண் வர்க்கத்திற்கு விடை கொடுத்துவிட்டு, RAHMAM எழுத்திற்கேட்ப பெண் வர்க்கத்திற்கு பிரதமர் பதவியை தாரை வார்க்க தயாராகி விட்டார்கள்.
அந்த வகையில் 1) ரோஸ்மா, 2) அஸ்லினா,
3-வது, 4-வது, 5-வது பெண் பிரதமர்களை கண்டு பிடியுங்கள் பாப்போம் .
ரஹீம் , நான் கீதாஞ்சலி ஜி அவர்களை நாட்டின் பிரதமராக வர முன் மொழிகிறேன் … ஏன் என்றால் அவரும் எப்படி ஒன்றுமே இல்லாமல் வாயாலே வடை சுட்டு விற்கலாம் (பணம் சம்பாதிக்கலாம்) என்று தெரிந்து வைத்திருக்கிறார் …. கேட்டால் ஜப்பானில் ஜாக்கி சாணை தெரியும் , அமெரிக்காவில் அர்னோல்ட தெரியும் , இந்தியாவில இளையராஜாவை தெரியும் சொல்றது … இது எப்படி இருக்கு …. மேலும் அவர் இஸ்லாத்திற்கு சென்று விட்டதனால் …. வேலை சுலபமாக முடிந்து விட்ட்து ….
Nuul Izza ??????
திலீப் அவர்களே கழுசடைகளை பட்றி இங்கு எழுதி நமது சிந்தனையையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் ! ஏமாற்றுபவனும் குற்றவாளி ! ஏமாறுபவனும் குற்றவாளி ! நம்ம தல சொன்னது !! ஹி ,ஹி . சும்மா ஜோக்கு !! பேராசை பிடித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆராயாமல் நம்புவதால் வரும் விளைவுகள் ! சமுதாயத்தின் பலவீனத்தை சொல்லியே சமுதாயத்தை சுரண்டிய தானை தலைவர்களும் நம்முடன் தானே இருக்கிறர்கள். தூர நோக்கு இல்லாமல் தான் துன் அவர்கள் !! குருவிக்கும் கூடு உண்டு நமக்கு குடி இருக்க ஒரு வீடு இல்லை !! என்று கூட்டுறவு கழகம் ஆரம்பித்து துண்டாட பட்ட தோட்டங்களை வாங்கி தமிழனை சொத்துரிமையாளர்களாக்கலாம் என்று மந்திரி பதவியில் சம்பாதிக்காமல் தோட்டம் தோட்டமாக மாதம் பத்து வெள்ளி பிச்சை எடுத்தார் !!அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் அவ்வளவு தான் படித்திருந்தார் ! தானை தலைவனை போல் கோடி கோடியாக கொடுங்கள் இந்த சமுதாயத்தை உச்சத்தில் கொண்டு வைக்கிறேன் என்று புரட்சித்தனமாக தூர நோக்கு சிந்தனை இல்லை ! லச்சக்கணக்கில் யூஸ்ம் டாலர்ஸ் வாங்கி தருகிறோம் தமிழர்களே தெருவுக்கு வாருங்கள் என்ற இண்ட்ரப்பின் தூர நோக்கும் அவருக்கு இல்லை ! தமிழன் இந்நாட்டில் ஜஞ்சி கூலியாக வந்தவன் ! தன் கையே தனக்கு உதவி என்று தமிழன் முன்னேற வேண்டும் ! என்ற கொள்கையினால் மந்திரியாக இருந்தும் இந்த சமுதாயத்திற்காகே தன் சொத்தையெல்லாம் இழந்து ஏதுமின்றி செத்தார் ! இன்று அங்கங்கே அரசாங்கம் இந்து கோவில்களை உடைக்கிறது ! ( உடைத்த கோவிலை காரணம் காட்டி ஒரு கும்பல் மானியம் பெறத்தான் ) அறிக்கைகள் பறக்கின்றன ! புல்லுருவிகள் இந்து கோவில் சிலைகளை உடைத்தபோது ! மாரியாத்தா உனக்கா இந்த நிலை என்று கதறி துன் அவர்கள் கண்ணீர் வடித்ததை நேரில் பார்த்தவன் நான் ! ஒரு மனிதனை குறை கூறும் முன் அவர் வாழ்ந்த காலா கட்டம் மற்றும் சூழ்நிலை ! அவரின் மனிதாபிமானம் போன்றவைகளை சீர் தூக்கி பார்க்க வேண்டும் .