பார்டி பேபாஸ் ரசுவா (பிபிஆர்), அக்கட்சியின் தலைமையகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரி பொய்யானது என்று சங்கப் பதிவக தலைமைச் செயலாளர் முகம்மட் ரசின் அப்துல்லா கூறியதாக சொல்லப்படுவதை மறுத்துள்ளது.
கட்சித் தலைமையக முகவரி என்று பதிவான இடத்தில் ஓடுகளையும் பதிகல்களையும் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருவதாக ரசின் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
“எங்கள் அலுவலகம் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ளது. ஊடகங்கள் குறிப்பிடும் கடை கீழ்மாடியில் உள்ளது. இதுதான் குழப்பத்துக்குக் காரணம்”, என பிபிஆர் தலைமைச் செயலாளர் எஸ். கோபி கிருஷ்ணா ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆர்ஓஎஸ்ஸிடம் கொடுக்கப்பட்டது பிபிஆருக்கு முந்திய நியு ஜெனரேஷன் கட்சி 2013-இலிருந்து பயன்படுத்தி வந்த அதே முகவரிதான் என்றாரவர்.
நியு ஜெனரேஷன் கட்சி அதன் பெயரை பிபிஆர் என மாற்றுவதற்கு செய்துகொண்ட விண்ணப்பத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ரசின் கூறினார் என நேற்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்திருந்தது.