மக்ரிப் தொழுகைக்காக வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற சட்டவிதி பசார் மாலம் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்ற கடைக்காரர்கள் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கிளந்தான் அரசாங்கம் விளக்கமளித்துளது.
கிளந்தானில் பசார் மால ம் வியாபாரிகள் அத்தனை பேரும் முஸ்லிம்கள் என்று ஊராட்சிக்குப் பொறுப்பாக உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் பாத்தா மஹ்மூட் கூறினார்.
“ஏற்கனவே, அது பசார் மாலம் வியாபாரிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட விதி என்பதை நான் விளக்கி இருக்கிறேன். கோத்தா பாரு முனிசிபல் கவுன்சிலில் நீண்ட காலமாகவே இது அனுசரிக்கப்பட்டு வருகிறது”, என்றாரவர்.
எல்லாக் கடைகளையும் மூட வேண்டும் என்று தாம் கூறவே இல்லை என்று அவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
இந்த மடையர்களுக்கு மற்றவர்கள் இந்த நாதாரிகளுக்கு அடங்கியே நடக்க வேண்டுமாம்? சம நீதி கிடையாது– அடக்கி ஆள்வதே இந்த நாதாரிகளின் வழிமுறை– இப்போது இந்தியாவிலும் பிஜேபி –ஆரம்பித்து விட்டது.
அடேயப்பா! இப்பவே இப்படி பண்றீங்களே, ம.இ.கா, ம.சி.ச. அம்னோவின் ஆதரவோடு, பாஸ் கட்சி கொண்டுவரும் இஸ்லாமிய சட்டங்கள் அமலுக்கு வந்தால், எங்களை என்னா பண்ணுவீங்களோ தெரியலையே சாமி!
சவூதி போல் ஆகிவிடும்–அதை நோக்கியே எல்லாம்.