சுப்ரா: ஸக்கீரின் சமயச்சொற்பொழிவு பிரிவினைச் சக்திகளை தூண்டிவிடுகிறது, ஒற்றுமையைக் கெடுக்கிறது

 

subradrஇஸ்லாமிய சமயச்சொற்பொழிவாளர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவுக்கு ஒரு “தவிர்க்கக்கூடிய குழப்பம்” என்று வர்ணித்ததோடு அவர் நாட்டின் ஒற்றுமையை கீழறுக்கூடும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் எச்சரித்தார்.

“மலேசியாவின் இஸ்லாமிய அடித்தளம் அல்லது அதன் பலசமய தேசிய நயம் ஸக்கீர் நாய்க்கின் சமய போதனையால் நிச்சயமாக பேணப்படப்போவதில்லை.

“மாறாக, அது இந்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் இஸ்லாமிய ஒன்றுபடுத்தும் கோட்பாடுகளை சிதைக்கும் பிரிவினைச் சக்திகளைத் தூண்டிவிடும்”, என்று அமைச்சர் சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.