யுஎம் விரிவுரையாளர் அவரின் இனவாதக் கருத்துகளுக்காக மாணவர்களிடம் மன்னிப்பு கோரினார்

 

Apologyfromlecturerயூனிவர்சிட்டி மலாயா (யுஎம்) விரிவுரையாளர் ஒருவர் அவர் கூறிய இனவாதக் கருத்துகளுக்கான மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

யுஎம் துணை வேந்தர் முகமட் அமின் ஜலாலுடின் மலேசியாகினிக்கு கொடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்த விரிவுரையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் ஒரு கூட்டம் நடந்தது என்று கூறியுள்ளார். அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அக்கூட்டம் மார்ச் 30 இல் நடந்தததை யுஎம் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அக்கூட்டத்தில் அந்த விரிவுரையாளர் வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று அமின் கூறினார்.

கடந்த பெப்ரவரியில், “ஓர் இந்திய மாணவனின் குரல்” என்ற ஒரு முகநூல் பதிவில் அந்த விரிவுரையாளர் இரண்டு இந்திய மாணவர்களை அடுத்தடுத்து உட்காரவிடாமல் தடுத்து விட்டார், ஏனென்றால் இந்தியர்கள் பார்த்து எழுதுவதிலும் எழுத்துத் திருட்டிலும் விருப்பமுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்” என்று அந்த விரிவுரையாளர் கூறியதாகவும் அந்த முகநூல் பதிவில் குறைகூறப்பட்டிருந்து.

நடந்த சம்பவத்திற்காக அந்த விரிவுரையாளர் வருத்தப்பட்டதாகவும், அவர் இனவாதப் பிரச்சனையை எழுப்பும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. எதிர்காலத்தில் மிகக் கவனமாக இருப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்று அமின் மேலும் கூறினார்.