ஹாடியின் மசோதாவை பிகேஆர் சாபாவும் சரவாக்கும் அடியோடு நிராகரிக்கின்றன

 

Sarawakpkrnoபாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவரது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்யும் உரிமை அவருக்கு உண்டு என்பதை மதிப்பதாக பிகேஆர் சாபா மற்றும் சரவாக் கிளைகள் கூறுகின்றன.

பாஸ் தலைவர் ஹாடி ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) திருத்தங்கள் மசோதாவை தாக்கல் செய்ய பெற்றிருக்கும் உரிமையை மதிக்கிறோம் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்ததற்கு உடன்பாடு தெரிவிக்கும் பல அறிக்கைகளை நமது பிகேஆர் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கைகள் பிகேஆரிலுள்ள நாங்கள் ஹாடியின் மசோதாவை ஆதிரிக்கிறோம் என்று சாபா மற்றும் சரவாக்கில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

“ஹாடி அவாங் அல்லது வேறெந்த எம்பிக்கும் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் உரிமை உண்டு என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,Liew Christina ஆனால் அதுதான் எங்களுடைய ஒப்புதலின் எல்லை”, என்று பிகேஆர் சாபா தலைவர் கிரிஷ்டினா லியு மற்றும் சரவாக் தலைவர் பாரு பியன் ஆகிய இருவரும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறுகின்றனர்.

ஹாடியின் மசோதா ஷரியா நீதிமன்றங்களுக்கு வெறும் அதிகாரங்களை மட்டும் அளிக்கிறது என்ற கருத்துடன் வேறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

“நாங்கள் அந்த மசோதாவை அதன் தற்போதைய வடிவத்தில் எதிர்க்கிறோம், ஏனென்றால் இது ஹுடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் ஒரு கருவியாகும், உண்மையில் இது இருவகை கிரிமினல் நீதிபரிபாலனத்தை அறிமுகப்படுத்துவதாகும், என்று பேராசிரியர் ஷாட் ஃபரூக்கி தெளிவாக கூறியுள்ளார். (“Enhancing syariah courts’ powers”, publsihed in The Star on June 9, 2016.)

“இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அனைவரின் சமத்துவத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் விதி 8 ஐ இது மீறுகிறது”, என்று லியுவும் பாருவும் கூறுகின்றனர்.