இந்து சமயத்தை இழித்துரைப்பதாகக் கூறப்படும் தம் கவிதையை மீண்டும் தற்காத்துள்ள பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி அபிடின் தாம் எப்போதும் எல்லாச் சமயங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட தரப்பு அதையெல்லாம் நினைத்து நன்றி பாராட்டவில்லை, மாறாக தம் கவிதையைத் திரித்துக் கூறிவிட்டதாக அவர் சாடினார்.
“செய்ததையெல்லாம் மதிக்கவில்லை. மாறாக இண்ட்ராப் பள்ளித் தொழுகை உரைகளில் தலையிடுகிறது.
“இந்தியாவின் மோடி அரசாங்கம் குறித்து நான் எழுதிய கவிதையையும் மலேசிய இந்துக்கள் பற்றி எழுதிய கவிதை என்று திரித்துக் கூறியிருக்கிறார்கள்.
“அவர்களுக்கு என்னதான் வேண்டும்?”, என்று அஸ்ரி அவரது முகநூல் பக்கத்தில் வினவுகிறார்.
“நீண்ட காலமாகவே எல்லா சமயங்களுக்கும் இணக்கமான கருத்துகளைத்தான் சொல்லி வருகிறேன் – எல்லாமே நியாயமான கருத்துகள், அமைதி நோக்கம் கொண்ட கருத்துகள்.
“முஸ்லிம்- அல்லாதாரை ‘காபிர்-ஹர்பி’ என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன், அது இனங்களுக்கிடையே சச்சரவுகளை உண்டுபண்ணலாம் என்ற கவலையில்”, என்று கூறிய அவர், தம் மாநிலம் முஸ்லிம்- அல்லாதாருக்கு நிதியுதவி செய்து வந்திருப்பதாகவும் குழந்தைப் பராமரிப்பு விவகாரத்தில் இந்துக்களுக்கு ஆதரவான போக்கைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“பெர்லிஸ் முப்தி அலுவலகம் எல்லாச் சமயங்களிடமும் இணக்கப் போக்கைக் கடைப்பிடித்து வந்திருப்பதற்கு இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்”, என்றாரவர்.
உங்கள் அதாவது மலேசியாகினியில் நஜிப்பையும் அரசாங்க்த்தையும் நாம் இங்கே குறை கூறி எழுதினால் இங்கே போடமாட்ட்டானுங்க ஆசிரியரே வாசகர்கள் குறைந்து போனதுக்கு உமக்கு புரியவில்லையா நாங்கள் எழுதினாலும் உன் வலைத்தளத்தில் போடவா போகிறாய் …………
இந்தியாவில், இஸ்லாமியருக்கு கொடுமை ,கொலை மேலும் பல அநீதிகள் ,பிரதமர் மோடி ஆட்சியில் நடப்பதாக கூரும் இவர்( mohd asri ).பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஏற்படும் அநீதி கூறுவதில்லை …