நாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார்.
புத்ரா உலக வாணிப மையத்தில் மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்த நஜிப், இதெல்லாம் ஒரு நாடகம் என்பதை மறுத்ததோடு இது ஒரு கடும் முயற்சி என்றார்.
இந்த அறிவிப்புக்கும் எதிர்வரும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், இந்த இந்தியர் பெருந்திட்டத்தை தாக்கல் செய்வது பற்றிய வாக்குறுதியை 11 ஆவது மலேசியத் திட்டத்தை மே 2015 இல் தாக்கல் செய்தபோது அளித்ததாக கூறினார்.
இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லைதான், ஆனால் இந்தியர்கள் பாரிசானை ஆதரிக்க விரும்பினால் அதைத் தடுக்க மாட்டேன் என்று அங்கு குழுமியிருந்த 2000 பேரின் சிரிப்பு அலைக்களுக்கிடையே நஜிப் தெரிவித்தார்.
நஜிப் வெளியிட்ட இப்பெருந்திட்டத்தில், ரிம20 மில்லியன் உயர்க்கல்வி உதவிக்கும், ரிம350 மில்லியன் தொழில்முனைவர்கள் கடன் பெறுவதற்கான ஒரு சுழல் நிதியை அமைப்பதற்கும், ரிம500 மில்லியன் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட்டின் கீழ் வைத்து இந்தியச் சமூகத்தின் கீழ்மட்ட 40 விழுக்காடு வருமானம் பெறுபவர்களுக்கு (B40) உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த 10-ஆண்டு பெருந்திட்டம் ஓர் அரசியல் வாய்ப்பந்தல் என்பதை மறுத்த பிரதமர் நஜிப், “இது வெட்டிப் பேச்சு இல்லை”, மாறாக “இது நிஜம்” என்று தமிழில் கூறி அங்கிருந்த அவரது ரசிகர்களை அகமகிழச் செய்தார்.
நஜிப் அவரது உரையின் தொடக்கத்தில் இந்தப் பெருந்திட்டத்தை தயாரிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது, ஏனென்றால் இதற்கான கோட்பாடுகள், புள்ளிவிபரங்கள், எண்கள் மற்றும் பரிந்துரைகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்காக மாறாக அடிமட்ட மக்களிடமிருந்து வர வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது என்றாரவர்.
இந்தியர்களின் சமூக-பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்களை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு இந்தப் பெருந்திட்டம் ஆதாரமாகும் என்று நஜிப் மேலும் கூறினார்.
“மலேசியாவின் பிறந்த 25,000 பேருக்கு குடியுரிமை இல்லை”
இன்று நஜிப் அறிவித்த பெருந்திட்டத்தில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
இப்பெருந்திட்டத்தில்: உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கையை குறைந்தபட்சம் 7 விழுக்காடு அதிகரித்தல்;
அரசு பொதுச் சேவையில் இந்தியர்களின் பங்கேற்றலை 2026 அளவில் 7 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை கொண்டிருத்தல்;
“சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக ஒரு சிறப்பு தடையை நீக்கும் வழிமுறையைக் காணல்.
“சுதந்திரத்திற்கு முன்பு பிறந்த 20,000 லிருந்து 25,000 பேர் இன்னும் குடியுரிமைப் பெறவில்லை. அவர்களின் உரிமையை நாம் மறுக்கக்கூடாது”, என்று நஜிப் அவரது உரையில் மேலும் கூறினார்.
எவ்வளவு கொடுத்து என்ன பிரயோஜனம் ! எல்லா பணமும் ம.இ .கா காரனுங்க ஆரம்பித்த அரவாரியத்துக்குள் அடக்கமாகிவிடும் !! உண்மையான ஏழை இந்தியர்களின் பாடு அதோ கதிதான் !!!
கடந்த 13-வது பொதுத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட வியூகத் திட்டம் என்னவானது என யாருக்கும் தெரியவில்லை, பொறுப்பில் இருப்பவர்களும் சொல்லவில்லை.
ஆனால், புதுசு புதுசா, தினுசு தினுசா வியூகத் திட்டங்கள் , குறிப்பாக இந்தியர்களுக்கு. காரணம், அவர்கள்தானே திட்டங்கள் செயலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பேசா மடந்தையாக, தேசிய முன்னனிக்கு நம்பிக்கையோடு வாக்களிப்பார்கள்.
2013-ல், ஹிண்ராப்ட் இயக்கத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்னவானது? “ஆட்சிக்கு வந்தால் அக்கோரிக்கைகளை செயல்படுத்துவோம் , நம்பிக்கை வையுங்கள்” என கொடுத்த வாக்குறுதி என்னவானது?
18 கோரிக்கைகளை உள்ளக்கிய 4 உடன்படிக்கைகளுக்கு இசைந்து, தேசிய முன்னனியின் சார்பில் , தெங்கு அட்னான் மன்சோர் கைச்சாத்திட்டதை அதற்குள் மறந்துவிட்டாரா நமது பிரதமர்?
1974-ல் , அவர் தந்தை காலத்தில் தயாரிக்கப்பட்ட வியூகத் திட்டம் தொடங்கி 2013 ஹிண்ராப்ட் வரையிலான திட்டங்களை அமல்படுத்தியிருந்தாலே இந்திய சமூகம் முன்னேறியிருக்கும்.
இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலை வாய்ப்பு, வியாபாரத் திட்டங்கள் யாவும் அந்தப் பெருந்திட்டங்களில் இடம்பெறவில்லையா?
அடுத்த ஐந்தாண்டில் மீண்டும் தேர்தல் வரும், அதனால் மீண்டும் திட்டங்கள் தீட்டி , கையேந்தாமல் இருக்க இம்முறை 10 ஆண்டு திட்டம்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?
தேசியத் தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் என அணிவகுத்து நிற்கும் தலைவர்கள் இதைப்பற்றி எல்லாம் கேட்கவே மாட்டார்களா? வாய்மூடி வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்களா?
உங்கள் பதவிகளைத் தற்காத்துக்கொள்ள மக்களைப் பகடை காய்கள் ஆக்காதீர்கள். நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல!
“தவறு நடந்துவிட்டது, மன்னித்து, எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்!” என்ற நம்பிக்கை இன்னும் கொஞ்சம் சிலரிடம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதை தயவுசெய்து வீணடித்து விடாதீர்கள்.
மீண்டும் ஒரு மலேசிய-இந்தியர் படம், பழைய கதை….புதிய காப்பி!
தயாரிப்பு , இயக்கம் , கதை & வசனம் – தேசிய முன்னணி
கதாப்பாத்திரம் – ?
#drama #adventure #fantacy
நாம் அரசிலுக்கு அப்பாற்பட்ட நிலையில் சிந்தித்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும் .இதில் ஓ வ்வொரு சராசரி இந்தியனும்[தமிழனும்] பங்கு வகிக்க வேண்டும் .இன்றைய நம் நிலைக்கு அரசிசியல் போட்டிகளும் பொறாமைகளும் சண்டைகளும் காரணம் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டும் .
இராம தண்ணீர்மலை அவர்களே…நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாம் ஒன்று பட்டு தே.முவை ஆதரிக்க வேண்டுமா? அல்லது அவர்களுக்கு ஆதரவு தரக்கூடாதா?
எல்லாமே தேர்தல் உத்திகள்– நம்பிக்கை நாயகனுக்குத்தான் நம்மவர்களை பற்றி நன்றாக தெரியுமே. எவ்வளவு பணம் எதற்கு யாரிடம் கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா? வெறும் வாக்குறுதிகளைப்பற்றித்தான் நமக்கு தெரியுமே. வெத்து வேட்டு
ஸ்கார்பியோன் (MEGA SCANDAL), அல்தான்துயா (MEGA MURDER) மற்றும் 1MDB (MEGA DONATION) போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரான நஜிப்பின் கைவண்ணத்தில் உருவான மற்றொரு பிரமாண்டமான தயாரிப்பான INDIAN BLUEPRINT நேற்று வெளியீடு கண்ட வேலையில் பலரது விமர்சனங்களுக்கு இடையிலும், இப்படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமை பெற்ற ஒரே நிறுவனமான MIC-யின் உரிமையாளர் சூ.. சூ.. சூப்பி(டு)மணி இப்படம் வெளிவந்து ஒரே வாரத்தில் ஊத்திக்கொண்டாலும் வரும் பொதுத்தேர்தல் முடியும்வரையாவது படத்தை ஒட்டிவிடுவோம் என இப்படத்தின் இயக்குனர் நஜிப்பிடம் உறுதி அளித்து விட்டு திணறுகிறாம்.
காரணம் இப்படத்திற்கு ரஜினிகாந்தை கதாநாயகனாக நடிக்க வைக்கும் முயற்சியில் தாமும் இயக்குனர் நஜிப்பும் தோல்வி கண்டது படத்திற்கு ஒரு மைனஸ் பாயிண்ட் என்றாலும் இப்படத்தின் வெளியீட்டு விழாவுக்காவது ரஜினிகாந்தை அழைத்து வந்திருந்தால் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக இருந்திருக்கும் MIC நிறுவனத்தின் அடிவருடிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுதானாம்.
அதற்கு MIC-யின் உரிமையாளர் சூ.. சூ.. சூப்பி(டு)மணி நமது பிளஸ் பாயிண்டே நமது மைனஸ் பாயிண்ட்தானே என்று தனது அடிவருடிகளுக்கு ஆறுதல் கூறியுள்ளாராம்.
அதே மூட MIC போக்கிரி பசங்க அதே சுரண்டல் வாதி நஜிப் தமிழனே இன்னுமாடா இந்த நாதேரிகளை நம்புறீங்க . தமிழனே ஷம்ஸுக்கு அடிமை போகும் தமிழனே இவனுங்களை நம்புவான் நல்ல மானமுள்ள தமிழன் அல்ல
எதை செய்தாலும் நம் நிலையில் மாற்றம் இருக்கப்போவதில்லை . கடந்து சென்ற ஆண்டுகள் நல்ல சான்று .நம்மவர் யாவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு வறியவவர்களின் துயர்களை துடைக்க முற்பட்டால் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என ஆழமாக நம்புகிறேன் .
“எவ்வளவு கொடுத்து என்ன பிரயோஜனம் ! எல்லா பணமும் ம.இ .கா காரனுங்க ஆரம்பித்த அரவாரியத்துக்குள் அடக்கமாகிவிடும் !! உண்மையான ஏழை இந்தியர்களின் பாடு அதோ கதிதான் !!!” அப்படி என்றால் , எல்லா மா இ கா காரணிகளையும் தோற்கடித்தால் , அந்த பணம் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் …. எனவே யோசியுங்கள் என்ன செய்வது என்று ….
என்னை பொறுத்த மட்டில் இதில் பயன் உள்ளது ஆனால் ஏழைக்கு உதவுமா என்று தெரியாது
நம்பிக்கை அறிவிப்பில் இதுவும் ஒன்று.ஏமாறப்போவது சமுதாயமே.
மகிழ்ச்சி ,நமது பணத்தை நமக்கே கொடுத்து மார் தட்டி கொள்வது ! இந்தியர்களின் மேம்பாட்டிற்கு மலேசிய அரசாங்கம் கொடுக்கிறது என்றால் , இந்த நாட்டில் பிறந்து இந்தநாட்டின் மேம்பாட்டிற்காகவே உழைத்த உமது மலேசிய மக்களுக்கு தானே தருகிறீர்கள் ! இந்தியனும் இந்த நாட்டுபிரஜை தானே ! வரி காட்டுகிறான் தானே ! அதென்ன எங்கோ பிறந்த நாடற்றவனுக்கு கொடுத்ததுபோல் ஒரு தென வெட்டு ! சுப்ரமணியனும் எதோ யாரும் சாதிக்கமுடியாததை செய்தது போல் ஒரு எகத்தாளம் ! ஐயா சுப்பிரமணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு போடும் பிச்சையை தயாயு செய்து பாத்திரமறிந்து பிச்சை போடைய ! நீர் முழு அமைச்சர் ! நல்ல சம்பளம் ! அரசாங்க சலுகைகளும் அதிகம் ! தேன் கிடைத்திருக்கிறது உள்ளங்கையை நக்குவோம் என்று புத்தியை அலைய விட்டுடாதேயும் ! தானை தலைவனுக்கு அன்று இந்த சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட பல கோடி மானியங்கள் MIED கொடுத்தேன் ! மருத்துவ மாணவர்களுக்கு கொடுத்தேன் என்றெல்லாம் கடத்த பட்டது ! ஏழை சமுதாயம் தன் கையை ஊன்றி எழுதிருக்கலாம் என்று கொடுத்த முதலீடும் காணாமல் போய் விட்டது ! maika என்ற பெயரில் தமிழன் அடி வாங்கி மயங்கியதுதான் மிச்சம் ! பராசக்தி வந்தாலும் என்னை அசைக்க முடியாது என்றவனை மகாதீர் உங்கள் இந்திய சமுதாயத்திற்கு இவன் எதையும் கேட்டதில்லை என்றவுடன் மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ! சுப்பிரமணி நீரும் இந்திய சமுதாயத்தை எமாட்ரி விடாதே ! தெய்வம் நின்று கொள்ளும் !!
ஐயா, இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் இந்தியர்களிடம் இப்படி படம்காட்டி எமாற்றுவீர்கள்? அதிலும் மலேசிய இந்தியர்களில் தமிழனை மட்டும் இது போன்ற விஷயங்களில் மிகவும் எளிதாக ஏமாற்றிவிடலாம். இதை எழுதும்போது ஒரு தமிழன் என்ற முறையில் எனக்கும் அவமானமாகத்தான் இருக்கிறது.என்ன செய்வது. மீண்டும் ஒரு தவணை நமது உரிமையை அடிமையாக்க தயாராகி விட்டீர்களா?
இப்போதே மாக்காரன் எந்தெந்த வழிகளில் ஆட்டை போடலாம் என்று கணக்கு பண்ண ஆரம்பித்து விட்டான் . இந்த மனக்கோட்டை ராக்கெட் தேர்தலோடு விழுந்துவிடும் . 10 வருட திட்டம் அதோ கதிதான் . திட்டத்தை அமல்பத்தும் அதிகாரிகள் குள்ளநரித்தனத்தை பார்த்து பார்த்து அலுத்துவிட்டது . இவர் தமிழில் சொன்னால் நிறைவேறிவிடுமா?
இவர் சொன்ன குடியிருமையை ஒரு மாதத்தில் நிறைவேற்றி காட்டட்டும் . பிறகு நம்புவோம் . அயல்நாட்டுக்காரர்கள் சுலபமாக. குடியிருமை அளிக்கும் நமது தயாள சிந்தனையாளர் .இந்தியர்களுக்கு வாக்குறுதி மேல் வாக்குறுதி எதற்கு .?
நஜீப் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு மிக அருமையான விளக்கம் அளித்துள்ளார் திரு,ரகீம் எ.எஸ்.எஸ். அவர்கள், நன்றி ஐயா. அன்னிய வெளியீடான ம.இ.கா ப்ளூ பிரிண்ட் ரசிகர்களின் ஆதரவு பெறுமா?