விலைகள் குறைவதற்கு ஐந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் எட்டி இங். கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருப்பதை அடுத்து டிஏபி பிரதிநிதி இவ்வாறு கூறினார்.
வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டதுபோல் தெரிகிறது என்று குறிப்ப்பிட்ட அவர், அமைச்சர்கள் பொருளாதாரம் மோசமடைவதற்கான உண்மையான காரணத்தை மறுக்க முனையும்போது நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது என்றார்.
“அரசாங்கம் உண்மையிலேயே இந்நிலைக்குத் தீர்வுகாண விரும்பினால் இந்த ஐந்து விவகாரங்கள்மீது அது கவனம் செலுத்த வேண்டும்.
“இந்த ஐந்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தினால் பொருள் விலைகளும் மலேசிய பொருளாதாரமும் சீரடையும் என்று நம்புகிறேன்”, என இங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அவர் குறிப்பிடும் ஐந்து நடவடிக்கைகள்:
ஜிஎஸ்டி-யை ஒழித்தல், 1எம்டிபி மோசடிக்குத் தீர்வுகண்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், ஊழலை ஒழித்தல், ரிங்கிட்டின் மதிப்பை மீட்டெடுத்தல், பெட்ரோல் விலையைக் குறைத்தல்.
உணவு விலை உயர்வதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று தெங்கு அட்னான் நேற்று கூறி இருந்தார்.
எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் குடும்ப சொத்து விபரங்களை அறிவித்தல் ஆறாவது நடவடிக்கையாக இருக்கலாமே?