எதிர்காலத்தில் தரமான மனித வளமே மலேசியாவின் வெற்றிக்குத் திறவுகோலாக விளங்கும் எனப் பேரரசர் ஐந்தாவது சுல்தான் முகம்மட் கூறினார்.
தரமான மனித வளத்தைக் கொண்டுதான் மக்கள் தங்கள் ஆக்கத்திறனையும் போட்டியிடும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இன்று காலை இஸ்தானா நெகராவில் நடைபெற்ற 15வது பேரரசரின் அரியணை அமரும் விழாவில் உரையாற்றிய மாமன்னர், “ஒவ்வொரு மலேசியரும் அவரவர் பங்கினைப் பொறுப்புடன் ஆற்ற வேண்டும், நாட்டுக்காக உழைப்பதில் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது”, என்று வலியுறுத்தினார்.
இளைய தலைமுறையை நாட்டின் எதிர்காலம் என்று வருணித்த ஐந்தாவது சுல்தான் முகம்மட் , அவர்கள் அறிவாற்றலையும் திறன்களையும் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அறிவைத் தேடுவதற்கு முடிவே இல்லை என்றாரவர்.
ஹஹஹஹஹ. பெரிய பேச்சு. ஆனால் நாட்டில் நடப்பது என்ன? இங்கு எங்கு தரத்திற்கும் அறிவுக்கும் இடம்? தோலின் நிறத்திற்கு தானே இங்கு எல்லாம். இன மத வெறியாளர்க்கு தானே இங்கு மதிப்பு? மற்ற மலேசியர்களுக்கு என்ன மதிப்பு மரியாதை?