வேறு எந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் பாஸ் மாநில 56 தொகுதிகளில் 45 தொகுதிகளிலும், 22 நாடாளுமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று கூறுகிறது.
இம்முடிவு தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எடுக்கப்படும், அதாவது முன்னாள் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியோடு எவ்வித ஒப்பந்தமும் இல்லாத நிலையில் என்று சிலாங்கூர் பாஸ் கமிஷனர் இஸ்கந்தர் அப்துல் சாமாட் கூறினார்.
“நாங்கள் எங்களுடைய வேட்பாளர்களின் பெயரை பாஸ் மத்தியக் குழுவின் முடிவிற்காக அதனிடம் கொடுத்து விட்டோம்”, என்று அவர் கோலகுபுபாருவில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பக்கத்தான் ரக்யாட் கலைக்கப்பட்டுவிட்ட போதிலும் பாஸ் சிலாங்கூர் மாநில அரசில் பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றுடன் சேர்ந்து அங்கம் பெற்றுள்ளது.
பகாங் மாநிலத்தில் பாஸ் குறைந்தது 30 மாநில மற்றும் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேராக் பாஸ் கழிஷனர் ராஸ்மான் ஸகாரியா மாநிலத்தின் 59 தொகுதிகளில் அவரது கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
எனக்கு தெரிந்து எல்லா தொகுதிகளிலும் மலாய், இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கிறார்கள், ஆகவே உங்கள் கட்சி எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். அப்போது தான் உங்களின் உண்மையான பலம் தெரியும். அதைவிடுத்து, இது எங்கள் தொகுதி என்று கூவிக்கொண்டு இருப்பது சிறுப்பிள்ளைதனமாக இருக்கிறது.