அஸ்ரி அவரது ‘கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்ட இந்துக்களிடம்’ மன்னிப்புக் கோருகிறார்

 

mufti1பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஸைனுல் அபிடின் இன்று முஸ்லிம் அல்லாதவர்களிடம், குறிப்பாக அவருடைய சர்ச்சைக்குரிய கவிதையின் அர்த்தத்தைத் “தவறாகப் புரிந்துகொண்ட” இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடம், மன்னிப்புக் கோரியுள்ளார்.

“நான் மனப்பூர்வமாக இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம், குறிப்பாக எனது கவிதையின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட இந்து சமயத்தினரிடம், மன்னிப்பு கோருகிறேன்”, என்று அஸ்ரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

“அனைத்து மனித இனங்களுக்கும் சமய வேறுபாடின்றி நீதி, இது எனது ஈடுபாடு”, என்று அவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.