தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட மாரா தலைவர் அனுவார் மூசா, பதவியிலிருந்தபோது அதிகாரமீறலில் ஈடுபட்டதாகவும் கிளந்தான் கால்பந்துக் குழுவுக்கு நிதிஆதரவு அளித்த விசயத்தில் மாரா பணத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுவது தொடர்பில் இன்று மாரா கணக்காய்வுக்குழுவிடம் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெதெரே எம்பி ஆன அனுவார், கிளந்தான் சிவப்பு வீரர்கள் குழுவுக்கு நிதிஆதரவு வழங்கிய விவகாரம் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டதை அடுத்து ஜனவரி 31, மாரா மற்றும் மாரா முதலீட்டு நிறுவனத் தலைவர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, பிப்ரவரியில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) அனுவார்மீது தனியே ஒரு விசாரணையை நடத்தியது.
அதன் விசாரணைகள் முடிந்து விசாரணை அறிக்கை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் கூறினார்.