சரவாக் அரசு, அம்மாநிலத்துக்குக் கடல்வழி வரும் வணிகப் பொருள்கள் அனைத்தும் கிள்ளான் துறைமுகம் வழியாகத்தான் வர வேண்டும் என்ற கொள்கையைக் கூட்டரசு அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
அக்கொள்கையை ரத்துச் செய்வது சரவாக்கில் பொருள் விலை குறைவதற்கு உதவும் என்று தாமும் மாநில அமைச்சர்களும் நம்புவதாக முதலமைச்சர் ஆபாங் ஜொஹாரி ஓபெங் கூறினார்.
“இறக்குமதி ஆகும் எல்லாப் பொருள்களும் கிள்ளான் துறைமுகம் வழியாகத்தான் வர வேண்டும். முன்பு சரவாக் அனைத்துலக வணிகத்தில் ஈடுபடாத நேரத்தில் அக்கொள்கை பொருத்தமாக இருந்திருக்கலாம். இப்போது அனைத்துலக வணிகத்தில் சரவாக் ஈடுபட்டுள்ளது அதனால் அக்கொள்கையை ரத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டுக் கப்பல்கள் அம்மாநிலத்துக்கு நேரடியாக வர முடியும்.
“முன்பு பிந்துலு துறைமுகம் இல்லை, மற்ற துறைமுகங்களிலும் வசதிகள் இல்லை. இப்போது கொள்கலன் ஏற்றி இறக்கும் வசதி எல்லாம் வந்து விட்டது. அதனால், அக்கொள்கையை ரத்துச் செய்து விட்டு பொருள்களை நேரடியாக சரவாக் துறைமுகங்களுக்கு அனுப்புவதற்கு வழிகோலும் தருணம் வந்து விட்டது”, என்றாரவர்.
ஆபாங் ஜொஹாரி டிவி1-இல் ஒளியேறிய ‘Bersama Ketua Menteri Sarawak’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்தார் .