ஜிஎஸ்டி வரி சுழியத்திற்கு குறைக்கப்படும் என்பதில் பக்கத்தான் ஹரப்பன் நிலைப்பாடு உறுதியானது

 

Nurulzerogstபொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சுழியம் விகிதத்திற்கு குறைக்கப்படும் என்பதில் பக்கத்தான் ஹரப்பானின் நிலைப்பாடு முரண்பாடற்றது. அக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பு சுழியமாக்கப்படும் என்ற அதன் வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் விளக்கம் அளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அடுத்த 14 ஆவது பொதுத் தேர்தலில் ஹரப்பான் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி வரியை அகற்றாது என்று அதன் தலைப்புச் செய்தியில் கூறிற்று.

என்எஸ்டியின் அசெய்தியைத் தொடர்ந்து நூருல் இஸ்ஸா பக்கத்தான் ஹரப்பான் ஜிஎஸ்டி வரியை அகற்றும் அதன் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.