‘பயங்கரவாத’ புத்தகங்கள் வைத்திருந்த சித்தி ஆயிஷாவுக்கு ஐந்தாண்டுச் சிறை

aishaமுன்னாள்   முதுகலை    பட்டப்படிப்பு    மாணவர்      சித்தி   நூர்   ஆயிஷா     அடான்   பயங்கரவாதம்   குறித்துப்  பேசும்   12   புத்தகங்களை வைத்திருந்ததற்காக   கோலாலும்பூர்    உயர்   நீதிமன்றம்    அவருக்கு   ஐந்தாண்டுச்   சிறைத்  தண்டனை    விதித்தது.

“அரசுத்தரப்பு  குற்றச்சாட்டை   ஐயந்திரிபற  நிரூபித்திருக்கிறது.  குற்றஞ்சாட்டப்பட்டவர்  குற்றவியல்    சட்டம்   பிரிவு  130ஜேபி (1) (ஏ)-இன்கீழ்   குற்றவாளி    எனத்    தீர்ப்பளிக்கப்படுகிறது”,  என்று   நீதித்துறை  ஆணையர்   முகம்மட்   ஷரிப்  அபு  சமட்  கூறினார்.

சித்தி  ஆயிஷாவின்   செயல்கள்   “வெறுக்கத்தக்கவை,   மோசமானவை”   என்று   ஷரிப்  வருணித்தார்.    சித்தி  ஆயிஷாவின்   ஐந்தாண்டுச்  சிறைத்   தண்டனை    அவர்  முதன்முதலாகக்  கைது   செய்யப்பட்ட    நாளிலிருந்து   தொடங்குவதாகக்  கூறிய   நீதி   ஆணையர்,    அவரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட   புத்தகங்களை  அழிக்கும்படியும்    உத்தரவிட்டார்.