Yapeim இயக்குனர் தடுப்புக் காவலில், அம்னோ அரசியல்வாதி இன்னும் கைதாகவில்லை

caseமலேசிய    ஊழல்தடுப்பு     ஆணையம்(எம் ஏசிசி) ,  யயாசான்   பெம்பாங்குனான்   இஸ்லாம்  மலேசியா (Yapeim)வின்  இயக்குனரை   ஐந்து   நாள்களுக்குத்   தடுத்து  வைக்க      நீதிமன்ற   உத்தரவைப்  பெற்றுள்ளது.

அந்த   47-வயது   ஆடவர்   குற்றவியல்   சட்டம்   பிரிவு  409-இன்கீழ்   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக   ஊடகங்கள்   கூறின.

Yapeimமில்   அனாதைப்  பிள்ளைகளுக்கான   நிதி  நிர்வாகத்தில்  முறைகேடு   நிகழ்ந்திருப்பதாகக்   கூறப்பட்டதை   அடுத்து,    அவர்   நேற்று  புத்ரா  ஜெயாவில்      வாக்குமூலம்   பதிவு   செய்யப்பட்டு   பின்னர்  கைது    செய்யப்பட்டார்.

மற்றொரு  நிலவரத்தில்  நேற்று   குற்றஞ்சாட்டப்படுவார்    என்று   எதிர்பார்க்கப்பட்ட   அம்னோ   அரசியல்வாதி   ஒருவர்    நீதிமன்றத்துக்குக்  கொண்டு  வரப்படவில்லை.

மலாக்கா   மெஜிஸ்ட்ரேட்   நீதிமன்றம்   ஏற்கனவே  அவருக்குக்  கைது   ஆணை  பிறப்பித்து  விட்டதாகவும்   எம்ஏசிசிதான்   அவரை   இன்னும்   கைது   செய்யவில்லை    என்றும்   நியு   ஸ்ரேட்ஸ்  டைம்ஸ்    செய்தியொன்று    கூறியது.

அந்த   அரசியல்வாதி    பணச்  சலவை   நடவடிக்கைகள்,   நம்பிக்கை   மோசடி  எனப்  பல  குற்றச்சாட்டுகளை   எதிர்நோக்குவதாக   அந்த   நாளேடு  கூறிற்று.  அவர்  குற்றவாளி   எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்   20  ஆண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்படலாம்    அபராதம்,  பிரம்படி   ஆகியவையும்  உண்டு.