ஹிண்ட்ராப் மீது நடவடிக்கை எடுக்க ஐஎஸ்எ மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும், மலாய்-முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை

 

ReviveISAசில ‘தீவிரவாத” அமைப்புகள் பெடரேசனின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தின் தகுதிக்கு சவால் விடுவதாகக் கூறப்படுவதை எதிர்கொள்ள அகற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 22 மலாய்-முஸ்லிம்கள் அடங்கிய அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பாரிசான் பெர்திண்டாக் மிலாயு இஸ்லாம் (பெர்திண்டார்) என்று கூறிக்கொள்ளும் அந்த அமைப்பு பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவும் (ஹிண்ட்ராப்) அதன் தலைவர் பி. வேதமூர்த்தியும் உடனடியாகக் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய மிரட்டல் என்று கூறுகிறது.

இன்று நடைபெற்ற மலாயு-முஸ்லிம் அரசுசார்பற்ற அமைப்புகளின் கூட்டம் பி. வேதமூர்த்தியையும் ஹிண்ட்ராப்பையும் தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளுக்களிடையே மிக ஆதிக்கமும் கர்வமும் மிக்கது என்று பெயர் குறிப்பிட விரும்புவதாக தெரிவித்தோடு அவரும் அந்த அமைப்பும் விபரீதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடிய எதிர்ப்புச்சக்திகளுக்கு ஊக்கமளிக்கின்றன என்று பெர்திண்டாக்கின் பேச்சாளர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அசிஸ் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அரசாங்கம் சமய போதகர் ஸக்கீர் நாய்க்கிற்கு வழங்கியிருக்கும் நிரந்த தங்கும் தகுதியை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஹிண்ட்ராப் hindraf_bnகோரியிருப்பதாக கூறப்படுப்படுவதை கைருல் அஸாம் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற முடிவையும் இக்கூட்டம் எடுத்துள்ளது.

இவற்றைவிட, வேதமூர்த்தி மற்றும் ஹிண்ட்ராப் கொண்டிருக்கும் கர்வத்திற்கு எதிராக அனைத்து மலாய்-மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் திரண்டு எழ வேண்டும், ஏனென்றால் அது தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலானது என்று அவர்கள் வர்ணித்தனர்.

பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலியும் அங்கிருந்தார். மலேசியாவில் அனைத்து சமயங்களும் சமம் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பெடரேசனின் சமயம் இஸ்லாம். மற்ற சமயங்கள் சுதந்திரமாக பின்பற்றப்படலாம். சுதந்திரமாகப் பின்பற்றலாம், ஆனாலும் இஸ்லாத்திற்கு சமமான நிலையில் அல்ல என்று இப்ராகிம் தெளிவுப்படுத்தினார்.

எங்களுக்கு தொந்தரவு கொடுத்தால், நாங்கள் உங்களுக்குத் தொந்தரவு கொடுப்போம் என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.