அரசாங்கம் எப்போதும் நன்கு சிந்தித்து, வரம்புக்குட்பட்டுத்தான் செலவு செய்கிறது, ஊதாரித்தனமாக செலவிடுவதில்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“செலவு செய்வதில் அவசரம்காட்டக் கூடாது.
“பணம் கடன் வாங்கினால் அது ஆக்கப்பூர்வமான முதலீட்டுக்காகத்தான் இருக்க வேண்டும்”, என நிதி அமைச்சருமான நஜிப் கூறினார்.
நிதி அமைச்சின் மிகச் சிறந்த சேவைக்கான விருதளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய நஜிப், நாட்டின் கடன் அளவு எப்போதும் 55 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றார்.
2016-இல் மலேசியாவின் தேசிய கடன் 52.6 விழுக்காடாக இருந்தது என்றாரவர்.