அமனா கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இரகசியமாக ஒத்துழைத்து வருவதாக பாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அவ்விரண்டும் சேர்ந்து பாஸிடமிருந்து கிளந்தானை கைப்பற்ற முனைந்திருப்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
“அண்மையில் துணைப் பிரதமர் (அஹ்மட் ஜாஹிட் ஹமிட்) கிளந்தானில் பேசியபோது அம்மாநிலத்தை நீல நிறமாக்கப் போவதாக அறிவித்தார்.
“முன்னைப்போல் பழைய எதிரிகளை மட்டும் எதிர்நோக்கவில்லை. ஆரஞ்ச் சட்டைக்காரர்களும் புதிதாக தோன்றியுள்ளனர். அவர்களும் கிளந்தானைப் பிடிக்க விருப்பம் கொண்டுள்ளனர்.
“அவர்கள் ‘நீல நிற’த்துடன் ஒத்துழைப்பதுபோல் தெரிகிறது”, என துவான் இப்ராகிம் நேற்று கெடா, அலோர் ஸ்டாரில் பாஸ் இளைஞர் ஆண்டுக்கூட்டத்தில் கூறினார்.
ஆரஞ்ச் நிறம் அமனா கட்சியின் நிறம். நீலம் பிஎன்னின் நிறமாகும்.