பாஸ் யாருடனும் ஒத்துழைக்க முடியாது என்று அதன் கதவுகளை இழுத்து மூடிக்கொள்ளவில்லை. அது ஒத்துழைக்க தயாராகவே உள்ளது.
“டிஏபி, பார்டி அமனா நெகரா (அமனா) அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் ஒத்துழைக்க நாங்கள் தயார்”, என பாஸ் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் கூறினார்.
இன்று , அலோர் ஸ்டாரில் பாஸ் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். எந்த அரசியல் ஒத்துழைப்பும் “இஸ்லாத்துக்கு முன்னுரிமை” கொடுப்பதாக இருக்க வேண்டும் என்றாரவர்.
அதற்கு பாஸ் தலைவர்கள்தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல .
“இஸ்லாத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவர் தலைமை தாங்க வேண்டும் . அதுதான் எங்கள் விருப்பம்”, என்றார்.
நல்ல கருத்து. எல்லா எதிர்தரப்பினரும், தங்களது ‘ஈகோ’ வை மூட்டைகட்டி வைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாரிசானை எதிர் கொள்வோமானால், தற்போதைய கொடுங்கோல் ஆட்சியை அகற்ற முடியும்.
“இஸ்லாத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவர் தலைமை தாங்க வேண்டும் . அதுதான் எங்கள் விருப்பம்”, என்றார்.// முதல் கோணல் முற்றிலும் கோணல் ! பல இனம் சமயம் கொண்ட நாட்டில் இந்த கோரிக்கை சரிப்படாது ! போங்கடா நொன்னைகளே !