மலாக்காவில் ஓர் அம்னோ அரசியல்வாதி மீது ஊழல் குற்றம் சாட்டப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் அவர் காணாமல் போய்விட்டார் என்று கூறப்படுவது பற்றி, அதுவும் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும், சந்தேகத்தை எழுப்புகிறது என்று பிகேஆர் புக்கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் இன்று கூறினார்.
மலாக்கா முதலமைச்சர் இட்ரீஸ் ஹருனுடன் தொடர்புடைய அந்த அரசியல்வாதியின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்படவிருந்தது, ஆனால் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது ஆணை இருந்தும் அவர் எப்படி இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்? அவர் எங்கே இருக்கிறார்? ஏன் அதிகாரிகள் அவரை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்?
அந்த அரசியல்வாதிக்கும் மலாக்கா முதலமைச்சருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், மேல்மட்டத் தலைவர்களால் அவர்
பாதுகாக்கப்படுகிறாரா என்று ஷம்சுல் இஸ்கந்தர் ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.