பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதற்கு அமெரிக்கப் பாடகர் செலினா கோமெஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டதும் ஒரு காரணம் என பாஸ் இளைஞர்கள் கூறுகிறார்கள்.
அது, பிகேஆருக்கு இஸ்லாத்தை வலுப்படுத்துவதில் அக்கறை இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என ஷா ஆலம் பாஸ் இளைஞர் பேராளர் அபிடுல்லா பாஹிம் இப்ராகிம் கூறினார்.
“இஸ்லாத்தை வலுப்படுத்தும் கடப்பாடு சிலாங்கூர் பிகேஆர், மந்திரி புசார் (அஸ்மின் அலி) ஆகியோருக்கு இல்லை.
“உதாரணத்துக்கு அவர்கள் செலினா கோமெஸின் இசை நிகழ்ச்சியை நடத்துவதில்தான் ஆர்வம் காட்டினார்களே தவிர பாஸ், முஸ்லிம்கள், முஸ்லிம் என்ஜிஓ-களின் கருத்துகளை மதிக்கவில்லை”, என அபிடுல்லா இன்று கெடா பாஸ் இளைஞர் ஆண்டுக்கூட்டத்தில் கூறினார்.
பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து பேசிய அந்த சிலாங்கூர் பேராளர், பாஸ்-பிகேஆர் ஒத்துழைப்புக்கான நிபந்தனைகளில், இஸ்லாத்தை வலுப்படுத்துவதில் உறுதியான கடப்பாடு தேவை என்பதும் ஒன்று என்றார்.
அத்தீர்மானம் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு பெண்ணால் இப்படி இரண்டு கட்சிகள் சண்டை போடுவதை பார்த்தல் …. சிரிப்புதான் வருகிறது …..