டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சாபாவில் அடியெடுத்து வைப்பதினின்றும் தடுக்கப்பட்டார்.
1எம்டிபி மீதான மூன்று-நாள் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் 12.50க்கு கோத்தா கினாபாலு அனைத்துலக விமானம் வந்து சேர்ந்த அவரைக் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
“மாநில அரசிடமிருந்து காலையில் உத்தரவு வந்ததாக அவர் சொன்னார். காரணம் எதுவும் சொல்லவில்லை”, என புவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“இப்போது கோத்தா கினாபாலு குடிநுழைவு அலுவலகத்தில் இருக்கிறேன். பிற்பகல் மணி 2 -க்குத் திருப்பி அனுப்பப்படுவேன் என்றாரவர்.
பேருக்குத்தான் இது ஒரு நாடு. எதிர்க்கட்சிகளுக்கு இது இரண்டு நாடுகள். அதிலும் சாபா சரவாக் வேறு நாடு. அங்கு ஆளும் கட்சிக்குத்தான் அனுமதி. இதெல்லாம் ஒரு ஜனநாயக மக்கள் ஆட்சி. எப்படி பட்ட ஈனங்கள்?