அரசுப் பணியில் உள்ள பிரதமர்(பிஎம்) நஜிப் அப்துல் ரசாக் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தாம் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குழப்பம் தருவதாக உள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
மகாதிர் வேறு இருவருடன் சேர்ந்து தொடுத்த அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அபு பக்கார் ஜயிஸ், பிரதமராக உள்ள நஜிப் அரசமைப்பு அளிக்கும் விளக்கத்தின்படி பார்த்தால் அரசுப் பணியாளர் அல்ல என்றும் எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் தீர்ப்பளித்தார்.
அப்படியானால் பிரதமர் யார் என்று வினவுகிறார் மகாதிர்.
பினாங்கில் முதலமைச்சர் (சிஎம்) லிம் குவான் எங்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“குவான் எங்-கைப் பொருத்தவரை அரசுப் பணியாளராகக் கருதப்படுகிறார்”, என மகாதிர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஒரு சிஎம் அரசுப் பணியாளர் என்றால், பிரதமர் யார், கூலியாளா?”, என்றவர் குத்தலாகக் குறிப்பிட்டார்.
மகாதிமிர் தாத்தா! தற்போது நாட்டில் ஏற்படும் ஊழல்கள் யாவும் நீ ஏற்படுத்திக் கொடுத்த பாதை தானே அப்பா! No point barking now
மக்களுக்குத் தொண்டு செய்பவன் கூலி தானே!
அதைத்தானே நீயும் செய்தாய்…சாமி வேலு இந்திய சமுதாயத்திற்கு எதையும் கேட்கவில்லை ன்னு நீ சொல்லியது அனைவரும் அறிந்ததே.அப்படி என்றல் சாமி வேலு வேற்றுலகவாசியா? உனது கீழ் பணியாற்றும் ஒரு அமைச்சர் கடமையை சரிவர செய்யாதிருந்தால் நீர் என்ன செய்திருக்க வேண்டும்?
கடமை தவறிய ஒரு அமைச்சரை பணியில் வைத்திருந்தது யார் குற்றம்?
ஐயா மகாதீரே,
வளர்த்த கடா நெஞ்சிலே பாயும் என்பார்கள், உங்களை பொறுத்தவரையில் நீங்கள் வளர்த்த கடா கு…..சிலே பாய்ந்து விட்டது.