திரங்கானு பாஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாநிலத்துலுள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். பிகேஆருக்கு இடமளிக்கப்படாது.
கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஆறு திரங்கானு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒரே ஒரு பிகேஆர் வேட்பாளர், அஸான் இஸ்மாயில், மட்டுமே வெற்றி பெற்றார்.
திரங்கானு பாஸின் திட்டத்தை முக்தாமாரில் கலந்துகொண்டுள்ள பேராளர் கமருஸ்ஸாமான் அப்துல்லா வெளியிட்டார். கட்சி 8 வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கும் 32 வேட்பாளர்களை சட்டமன்றத்திற்கும் நிறுத்தும் என்றாரவர்.
பிகேஆருடன் இருக்கைப் பங்கீடு குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
1999 ஆண்டிலிருந்து பாஸ் பிகேஆருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த தேர்தலில், அம்னோ இரண்டு-இருக்கைகள் பெரும்பான்மையில் மாநில அரசை அமைத்தது.