திரெங்கானு மாநிலத்தில் மலாய்க்காரர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அம்மாநில அம்னோ உரிமையாளராவதற்கு இடமளிக்கும் வகையில் மாநிலச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கைத் தொடுத்துள்ள பண்டார் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அஸான் இஸ்மாயில், 2015 மாநில நிலச் சட்டங்களின் பிரிவு 9-க்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு திரெங்கானு மாநில அரசு தகுந்த விளக்கமளிக்கத் தவறிவிட்டதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான் மட்டுமே. அதனால்தான் வழக்கு தொடுப்பது என் கடமை என்று நினைக்கிறேன்”, என்றார்.