சிலாங்கூரில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் கட்சிமாறி புதிய கூட்டணி அரசை அமைக்க உதவுவார்கள் என்று கூறும் செய்திகளை வெறும் வதந்திகள் என செமந்தா சட்டமன்ற உறுப்பினர் தரோயா அல்வி மறுத்தார்.
“அது குறித்து இதுவரை நான் எதுவும் கேள்விப்படவில்லை”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
மந்திரி புசார் முகம்மட் அஸ்மின், சட்டமன்றக் கலைப்பு குறித்து விவாதிப்பதற்காக அடுத்த வாரம் பக்கத்தான் ஹராபான் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார் என்ற வதந்தியையும் தரோயா நிராகரித்தார்.
பாஸ் முக்தாமாரில் (ஆண்டுக்கூட்டத்தில்) பிகேஆருடன் உறவுகளை முறித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதை அடுத்து சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டதாம்.
“அப்படி எதுவும் கிடையாது.
“அவர் இன்றிரவு(நேற்றிரவு) மத்திய கிழக்குக்குப் புறப்படுகிறார். மொரோக்கோ, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளில் ஐந்து நாள் அலுவல் பயணம் மேற்கொள்வார், என்றாரவர்.