இவ்வாண்டு கோலாலும்பூரில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கூட்டமே இல்லை. கலந்துகொண்டவர்கள் 200 பேர் சொச்சம்தான்.
கடந்த ஆண்டில் 1,500 பேர் வந்தனர். அதற்கும் முந்திய ஆண்டில் 20,000 பேர் திரண்டிருந்தனர்.
மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த இவ்வாண்டு பேரணி தொழிலாளர் வேலை இழப்பு நிதி என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.
பேரணிக்கு வந்தவர்கள் சிவப்புச் சட்டை அணிந்து காலை 10 மணி அளவில் கோலாலும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒன்று திரண்டனர்.
பலர் “Hilang Kerja, Pekerja Merana” (தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்) என்று எழுதப்பட்டிருந்த அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
“தொழிலாளர்கள் வாழ்க”, முதலாளித்துவம் ஒழிக”, எங்களுக்கு உரிமை வேண்டும்” என்றும் முழக்கமிட்டனர்.
அதெல்லாம் பி.பி.நாராயணன், மக்கள் தொண்டன் டேவிட் காலத்தோடு முடிந்தது. இனி மே தினம் என்று சொல்லிக்கொள்வதோடு முடிந்து விடும்….
உள்நாட்டுத் தொழிலாளர்கள் ‘இல்லாத’ பட்சத்தில் வேறு யாரை எதிர்பார்த்தீர்கள்? இங்குள்ளவர்கள் 90% இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள். இவன்களில் எவனும் இந்த மாதிரி பேரணிகளில் கலந்து நேரத்தை வீணடிக்கமாட்டான். நம்மவர்களில் இருக்கும் சொச்ச சொச்ச பேர்களும் சொந்த காசில் சுன்யம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதாவது விலை வாசி விண்ணைத் தாண்டி போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில் சொந்த காசை செலவு பண்ணி பேரணியில் கலந்து கொள்ள விரும்பவில்லை. இந்த லட்சணத்தில் வெகு அமைதியாக பேரணி நடந்தது என்று நம்பிக்கை நாயகன் ‘புருடா’ செய்தி சொல்கிறார். வாழ்க மலேசியா வாழ்க தொழிலாளர் ஒற்றுமை.