நடேஸ்வரன்: செய்தியாளர்களுக்கு எழுதும் எழுத்துகளைத் தற்காத்துக்கொள்ளும் துணிச்சல் வேண்டும்

nadesநேர்மையான,  பொறுப்பான   செய்தியாளர்களைப்  பாதுகாக்க    சட்டத்தில்   போதுமான    விதிகள்   உண்டு     என்பதால்     அவர்கள்    தாங்கள்    எழுதுவதைத்   தற்காக்கும்   துணிச்சல்   கொண்டவர்களாக    இருத்தல்    வேண்டும்    என்கிறார்   மூத்த    செய்தியாளர்   ஆர்.  நடேஸ்வரன்.

“செய்தியாளர்களுக்கு    அவர்கள்    எழுதுவதைத்    தற்காக்கும்   துணிச்சல்  வேண்டும்.  அவர்கள்   சட்டத்துக்குட்பட்டு   எழுதும்போது  கவலைப்பட   வேண்டியதில்லை,  சட்டமே    அவர்களைப்   பாதுகாக்கும்”,  என்றவர்   மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

45  ஆண்டுகளுக்குமேலாக   ஊடகத்துறையில்   ஈடுபட்டு    வந்துள்ள     நடேஸ்வரன்  மலாய்  மெயிலில்    விளையாட்டுச்   செய்திகளை    எழுதும்    நிருபராக    வாழ்க்கையைத்    தொடங்கிப்   பின்னர்  “வெளிநாட்டுச்   செய்திகள்,  வணிகச்    செய்திகள்,    இன்னும்  பல்வகை     துறைகள்    குறித்தும்”   எழுதினார்.

“இடையில்   45வது  வயதில்   சட்டம்  படித்து  பட்டம்   பெற்றேன்”,  என்றாரவர்.

சன்   நாளேட்டில்   சிறப்புப்    புலனாய்வுச்  செய்திகள்      எழுதும்   செய்தியாசிரியாக   பணி  புரிந்துள்ள    நடேஸ்வரன்,   செய்தியாளர்கள்   ஆதாரங்களைக்  கொண்டுதான்   செய்திகளை    எழுத   வேண்டும்  என்றார்.

“அவர்கள்மீது   குற்றம்குறை  கூறப்படும்போது     ஆதாரங்கள்தான்   அவர்களுக்குச்   சிறந்த   பாதுகாப்பு. எப்போதும்  உண்மையையே  எழுதுங்கள்”,  என்றாரவர்.

செய்தித்துறை   பற்றியும்   சட்டம்   பற்றியும்    நன்கு    அறிந்தவரான     நடேஸ்வரன்    வரும்   சனிக்கிழமை (மே6)   ஒரு  கருத்தரங்கில்   கலந்துகொண்டு   பேசுகிறார்.

“ஊடகமும்   சட்டமும்  இணைந்து  வாழ  முடியுமா?”   என்ற   தலைப்பைக்  கொன்ண்ட   அக்கருத்தரங்கை    மலேசிய   வழக்குரைஞர்   மன்றமும்   மலேசியாகினியும்   கூட்டாக   ஏற்பாடு   செய்துள்ளன.