இந்நாட்டிலுள்ள இரகசியக் கும்பல்களின் தலைவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று துணை ஐஜிபி நூர் ரஷிட் இப்ராகிம் இன்று கூறினார்.
சம்பந்தப்பட்ட குண்டர் கும்பல் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து குண்டர்தனம் நசுக்கப்படும் என்று நம்புவதாக அவர் ஓர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பள்ளிகளில் காணப்படும் குண்டர்தனத்தின் பிரச்சனைகள் பற்றிய கேட்ட போது. சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் கேங் 24 மற்றும் கேங் 36 ஆகியவற்றின் 40 உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சமீப காலம் வரையில் குண்டர்தன நடவடிக்கைகளின் எண்ணிக்கைகள் குறைந்தன. ஆனால், இப்போது அவர்கள் பள்ளிக் குழந்தைகளை உட்படுத்தும் புதிய சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
குண்டர் கும்பல் தலைவர்கள் அரசியல் தலைவர்களோடு உலா வருகிறார்கள் அவர்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு தருகிறதே….
துணை ஐஜிபியே நீங்கள் போலீசார் இரகசியக் கும்பல் தலைவர்களை அடையாளம் கண்டுள்ளனர், கைது நடவடிக்கை விரைவில் என்று கூறுகிறீர்கள்.
இரகசியக் கும்பல் தலைவர்கள் உள்துறை அமைச்சரிடம் இருந்து “சிபாரிசு கடிதம்” வைத்திருந்தால் கைது நடவடிக்கை கேலிக்குரியதாகி விடுமே.
எதற்கும் உள்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து விட்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது.
இந்தியாவை பின்பற்றுகிறது–அவ்வளவுதான்.