வாக்காளர் பட்டியலில் 12க்கும் மேற்பட்ட தவறுகள் இருப்பது திண்ணம்

“தணிக்கை நிறுவனம் ஒன்று புள்ளி விவரக் களஞ்சியம் கணினி முறை ஆகியவற்றின் நேர்மையை   ஆராய்ந்து எல்லாத் தவறுகளையும் கண்டு பிடித்து துய்மையானதாக மாற்ற வேண்டும்.”

 

 

 

 

வாக்காளர் பட்டியல் தவறுகள் 0.0001 விழுக்காடு மட்டுமே என தேர்தல் ஆணையம் கூறுகிறது

ஹென்ரி ஹாக்: தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப், “நியாயமில்லை, நியாயமில்லை” என ஒரு குழந்தையைப் போல அழுகிறார்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது நஞ்சு தான் என்பது அவருக்குத் தெரியாதா?

வாக்காளர் பட்டியலில் 0.0001 விழுக்காடு மட்டுமே தவறுகள் இருப்பதாக அவர் எப்படி மதிப்பீடு செய்தார்?

அரசு சாரா அமைப்புக்கள் அம்பலப்படுத்திய மோசடிகள் இவ்வளவுதான் என அவர் சொல்ல  வருகிறாரா?

இன்னும் வெளிச்சத்துக்கு வராத தவறுகளைப் பற்றி என்ன சொல்வது? அந்த சிறிதளவு மோசடியால் விளைந்த பாதகங்களுக்கு என்ன பரிகாரம் ?

நமது தேர்தல் முறையில் சிறிய விழுக்காடு மோசடி கூட அடுத்த கட்சிக்கு பெரும்பான்மையைத் தந்து விடும். அது அரசாங்கமாகி விடும்.

டேனி லோ: தேர்தல் ஆணையத் தலைவர் தூதர்களை சாடுவதை நிறுத்திக் கொண்டு அம்பலமான குளறுபடிகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அவற்றை சிறிய பிரச்னை என ஒதுக்கித் தள்ளுவது அல்லது தவறுகள் இருப்பதாக ஒப்புக் கொண்டு ஆனால் அவை சிறிய விழுக்காடே எனச் சொல்வது அந்த ஆணையம் மீது பொது மக்களுடைய நம்பிக்கை வளர்க்க உதவப் போவதில்லை.

தேர்தல் ஆணையத் தலைவர் அதிகம் பேசப் பேச அந்த ஆணையம் மீதான நம்பிக்கை தளருகிறது.

அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது அந்த ஆணையம் அம்னோ கைப்பாவையாக இயங்குவதாகவே தோன்றுகிறது.

ஹத்தி பானாஸ்: அந்தத் தவறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்டவையா அல்லது உண்மையானவையா என்பதே இப்போதைய கேள்வி ஆகும். தாம் மனிதர் என்பதும் மனிதர்கள் தவறு செய்கின்றனர் என்பதும் அப்துல் அஜிஸுக்குத் தெரியும் போது அவர் ஏன் பெர்சே 2.0-உடன் இணைந்து வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த மறுக்கிறார்?

உங்கள் அடிச்சுவட்டில்: எப்படி விழுக்காடும் கணக்கியலும் எப்படி வேலை செய்கின்றனர் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. பிரச்னையே அது தான். 0.0001 விழுக்காடு என்பது உங்களைப் பொறுத்த வரையில் சாதாரணமானது. 

நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 0.0001 விழுக்காடு பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள். அதே 0.0001 விழுக்காடு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் மட்டும் இருந்தால் போதும். அவற்றின் முடிவுகளே மாறி விடும்.

அந்த இரண்டு தொகுதி முடிவுகள் கூட அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை யார் அமைப்பது என்பதைக் கூட நிர்ணயம் செய்யலாம்.

இரண்டு காசு: தேர்தல் ஆணையமே உன்னைத் திருத்தவே முடியாது. அந்த விழுக்காடு காகிதத்தில் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம். எத்தனை ஆயிரம் படியாக்கம் செய்யப்பட்டவர்களும் ஆவி வாக்காளர்களும் இருக்கின்றனர் என்பதை மட்டும் அது வெளியிட வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்_3da6: அது கணினி முறை. 0.000001 விழுக்காடு தவறைக் கூட ஏற்றுக் கொள்ள  முடியாது.

தெரிந்த தவறுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இன்னும் அம்பலமாகாத தவறுகளைப் பற்றியே நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.  இன்னும் எத்தனை இருக்கின்றன?

நான் கூறும் யோசனை: தணிக்கை நிறுவனம் ஒன்று புள்ளி விவரக் களஞ்சியம் கணினி முறை ஆகியவற்றின் நேர்மையை   ஆராய்ந்து எல்லாத் தவறுகளையும் கண்டு பிடித்து துய்மையானதாக மாற்ற வேண்டும். மக்கள் தவறுகளைக் கண்டு பிடித்துச் சொல்லும் வரை காத்திருந்து திருத்துவதில் எந்த நன்மையும் இல்லை.

முதலில் தவறே நிகழக் கூடாது. அது உங்கள் வேலை. அதனை செய்யுங்கள்!