உதவிச் சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது: பிஎஸ்டிக்கு மாணவர்கள் நினைவுறுத்து

psdஅரசாங்க  உதவிச்   சம்பளம்   பெறும்     மாணவர்கள்   அரசாங்கத்தை    வெளிப்படையாகக்  குறைகூறினால்    அவர்களுக்குக்   கொடுக்கப்படும்    உதவிச்  சம்பளங்கள்   நிறுத்தப்படும்    என்று   கூறும்    பொதுச்  சேவைத்   துறை(பிஎஸ்டி)   கடும்  கண்டனத்துக்கு    இலக்காகியுள்ளது.

பிஎஸ்டி     உதவிச்    சம்பளத்தில்     படித்துக் கொண்டே     சமூக   வலைத்தளங்களிலும்    மற்ற   இடங்களிலும்    அரசாங்கத்தைக்   குறைகூறும்   மாணவர்களின்    “உதவிச்  சம்பளங்களை    மீட்டுக்கொள்வது   சரியான    நடவடிக்கைதான்”    என்று    பிஎஸ்டி   தலைமைச்   செயலாளர்   சைனல்    ரகிம்   சிமான்   கூறியதாக     அறிவிக்கப்பட்டுள்ளது.

“(உதவிச்  சம்பளத்துக்குப்)   பணம்   கொடுப்பவர்கள்      குடிமக்கள்   என்பதை    பிஎஸ்டி    சுத்தமாக   மறந்து    பேசுகிறது  ……மக்கள்   வரிகளாக     அதற்குப்  பணம்   கொடுக்கிறார்கள்.

“பிஎஸ்டி  பணத்தை    வைத்து   மாணவர்களை   அடக்குவதும்  மிரட்டுவதும்   அடுக்காத   செயல்களாகும்”,  என   யுனிவர்சிடி   மலாயா    புதிய   மாணவர்   சங்க(யுமனி)த்   தலைவர்   கொன்   ஹுவா   என்    கூறினார்.

பிஎஸ்டி  கல்விச்  சுதந்திரத்தை    மறந்து   பேசுகிறது    என்று   சாடிய   கொன்,   உதவிச்   சம்பளம்   வழங்கப்படுவதன்   நோக்கமே   குறைநிறைகளை    ஆய்ந்தறியும்    தன்மையும்    நன்னடத்தையும்   கொண்ட  மாணவர்களை   உருவாக்குவதுதான்;  வெறும்   இயந்திர  மனிதர்களை   உருவாக்குவதல்ல    என்றார்.