மலேசியாகினி ‘ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் ஊடகம்’: நூர் ஜஸ்லான் குற்றச்சாட்டு

bfm உலக   பத்திரிகை சுதந்திர  தினமான   இன்று,    உள்துறை     துணை   அமைச்சர்    நூர்   ஜஸ்லான்    இணைய     செய்தித்தளமான     மலேசியாகினியை   “மிகவும்   ஒருதலைபட்சமாக”   நடந்துகொள்ளும்   ஊடகம்     என்று  வருணித்தார்.

பிஎப்எம்   89.9    வானொலியின்  நேர்காணல்   ஒன்றில்   கலந்துகொண்டபோது    நூர்   ஜஸ்லான்    அவ்வாறு   கூறினார்.

“அரசாங்கம்  கொடூரமானது    என்றால்      அரசாங்கத்தை   மிகவும்   குறைகூறி   வரும்   பிஎப்எம்மை   அது  இழுத்து   மூடியிருக்கும்”,  என்றவர்   அவ்வானொலியின்    காலைநேர   நிகழ்ச்சியில்  கூறினார்.

“மலேசியாகினி    மிகவும்   ஒருதலைபட்சமாக    நடந்துகொள்ளும்   ஒரு   ஊடகம்.  ஆனால்,  18    ஆண்டுகளாக     அதுவும்    செயல்பட்டுக்   கொண்டுதான்   இருக்கிறது”,  என  நூர்   ஜஸ்லான்    குறிப்பிட்டார்.