சங்கப் பதிவகத்தில் பதிந்து கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் கூட்டரசு அரசமைப்பைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) தலைவர் முகம்மட் ரஸின் அப்துல்லா கூறினார்.
“கூட்டரசு அரசமைப்புத்தான் நாட்டின் மிக உயர்ந்தபட்ச சட்டமாகும். எல்லாக் குடிமக்களும் அமைப்புகளும் குறிப்பாக அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றியாக வேண்டும்”, என முகம்மட் ரஸின் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அரசமைப்பைமீறி நடந்து கொண்டுள்ளனவா என்று ஆர்ஓஎஸ் ஆராய வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கேட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மலேசிய சங்கப் பதிவகம் பதிவு பெற்ற அமைப்புகளின் செயல்பாட்டை எப்போதும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.
சட்டமீறல் நடந்திருப்பது தெரிய வந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் ஆலோசனை நாடப்படும் என்று கூறினார்.
குறிப்பாக அம்னோ, பாஸ் நடவடிவிக்கைகளை கண்காணித்து வாருங்கள்!