‘போட்டியாளரின் உடை கவர்ச்சிமிக்கது என்று கூறவே இல்லை: செஸ் போட்டி இயக்குனர் மறுப்பு

chessதேசிய மாணவ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்     கலந்துகொண்ட 12  ஒரு சிறுமி   அணிந்திருந்த   ஆடை  மிகக் கவர்ச்சியானது  என்று   கூறவே  இல்லை  என   அப்போட்டியின்  இயக்குனர்   மறுக்கிறார்.

தனக்கெதிராகக்  கூறப்படும்   குற்றச்சாட்டுகள்   தன்னை   “அவமதிக்கும்”   நோக்கம்    கொண்டவை    என்றும்   தாம்    சம்பந்தப்பட்ட   சிறுமியைப்   பார்த்ததுகூட   இல்லை    என்றும்   போட்டி   இயக்குனர்    சோபியான்  ஏ.யூசுப்  கூறியதாக     நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைமஸ்    அறிவித்துள்ளது.

“அது  உண்மை   அல்ல.   சம்பவம்   நடந்ததாகக்  கூறப்படும்போது    நான்   அந்த  இடத்தில்   இருக்கவில்லை.

“அப்பெண்ணை    நான்   பார்த்தது   இல்லை.  அவர்    அணிந்திருந்த   உடையையும்   பார்க்கவில்லை”,  என்று   கூறிய    அவர்    சர்ச்சை   தோன்றியதை    அடுத்து   போட்டியின்   படப்பிடிப்பாளர்    அப்பெண்ணின்   ஆடையைக்  காண்பித்தபோதுதான்   அதைத்தான்   பார்த்ததாக     அவர்   கூறினார்.

அதன்பின்னர்    சமூக  வலைத்தளங்களில்     அவர்மீது   வெறுப்பைக்   கொட்டும்   செய்திகளாகக்  குவிந்ததைக்   கண்டு   மனமுடைந்து   போனார்  சோபியான்.

“முகநூலில்  வசைபாடும்    குறுஞ்செய்திகள்   நிறைய   வந்தன.  மிரட்டல்கள்   வந்தன. சிறார்மீது  காமுறும்  கயவன்  என்று    திட்டினார்கள்,  வக்கிர  புத்தி  கொண்டவன்    என்றார்கள்.  இந்தக்  குற்றச்சாட்டுகளில்    உண்மை   அல்ல    என்பதை    மட்டும்    இப்போது     கூறிக்கொள்கிறேன்”,  என்றாரவர்.