தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தேர்தல் எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மலாக்கா குடியிருப்பாளர்கள் எழுவருக்கு மலாக்கா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
“இனி, மலாக்காவில் தேர்தல் எல்லைத் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமுறை மேலாய்வு செய்யக் கேட்டுக்கொண்டு மனுச் செய்யலாம். இப்போது, எல்லை நிர்ணய நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவு விடுப்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது”, என தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தது.
ஏப்ரல் 4-இல், வாக்காளர்கள் எழுவர் இசி எதிரான நீதிமுறை மேலாய்வுக்கும் இசி-இன் நடவடிக்கைகளை நிறுத்திவைப்பதற்கான உத்தரவுக்கும் மனுச் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தனர்.
அனுமதி மட்டும் தான் ஆனால் நீதி கிடைக்குமா? அதுதான் நீதி தூங்கி பல காலம் ஆகிவிட்டதே..