ஊழல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பிடிப்போம், எம்எசிசி சூழுரைக்கிறது

 

Choosecleanleadersஊழல்வாதிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும்கூட அவர்களைப் பிடிப்போம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) சூழுரைத்துள்ளது.

ஊழல் பேர்வழிகளை விட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து கலங்கமற்ற தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று எம்எசிசி தலைவர் ஸுல்கிப்ளி அஹமட் வாக்காளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

எம்எசிசியின் தலைமை ஆணையராக கடந்த ஜூலையில் பதவி ஏற்ற அவர், தாம் தேர்தலுக்குப் பின்னர் கடும் நடவடிக்கைகள் எடுக்கத் தயக்கம் காட்டப்போவதில்லை என்றார்.

மேலும், எம்எசிசி பொதுநலம் காப்பதில் அதன் கடப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“(பொதுத் தேர்தலுக்காக) நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நான் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிடுவேன்.

“இது ஏனென்றால் அரசியல்வாதிகள் தூயவர்களாக இருக்க வேண்டும். அதிகாரம் பெற்றதும் சிலர் ஊழல்வாதிகளாகிவிடுகிறார்கள்”, என்று ஸுல்கிப்ளி மேலும் கூறினார்.