அறையில் இருக்கிற யானையைக் கவனிக்காமல், யானையின் பிணத்தை விசாரிக்கிறார்கள், கிட் சியாங்

 

elephnat carcassபேங்க் நெகாரா 1990களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைச் சந்தையில் சந்தித்த இழப்பு (போரெக்ஸ்) குறித்து விசாரணை நடத்தும் பணிக்குழுவின்முன் இன்று சாட்சியமளித்த லிம் கிட் சியாங், பணிக்குழுவினர் “யானையின் பிணத்தை” விசாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்களிடம் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் பணிக்குழுவினருடன் 30 நிமிட சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிட் சியாங், தற்போது “அறையில் இருக்கும் யானை” 1எம்டிபி ஊழல் விவகாரம் என்று கூறினார்.

இந்த போரெக்ஸ் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார், சம்பந்தப்படாதவர்கள் யார் என்று தம்மைக் கேட்டனர் என்று கூறிய கிட் சியாங், தமக்குத் தெரிந்த தகவல் அனைத்தும் தமது நாடாளுமன்ற உரைகளின் மூலம் அனைவரும் அறிந்ததாகும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

போரெக்ஸ் ஊழலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் பொறுப்புடைய அனைவரும் நல்லாட்சி மற்றும் பொறுப்புடமை ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டதாகும் என்றாரவர்.

அதே பாடம் இப்போது 1எம்டிபி விவாகாரத்தில் நம்மை எதிர்கொண்டுள்ளது. 1எம்டிபி ஊழலை விசாரிக்க ஒரு பணிக்குழுவை அமைக்க இன்னும் 25 ஆண்டுகளுக்கு காத்திருக்கப் போகிறோமா என்று கிட் சியாங் வினவினார்.