ஹரப்பானுக்கு “தராசு” சின்னம், தேர்வு செய்தார் நஸ்ரி

 

imbrogilio1எதிர்க்கட்சி கூட்டணியான ஹரப்பானுக்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்யும்படி சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸிடம் மூன்று வரைவு சின்னங்களை காட்டிய போது, இது கடினமான வேலை என்று கூறிய அவர், “நான் தராசுவை தேர்வு செய்கிறேன்”, என்றார்.

தராசு பாரிசான் நேசனல் சின்னமாகும்.

ஹரப்பான் அதற்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்வதில் குழப்பமடைந்திருப்பது அக்கூட்டணியின்imbrogilio2 நிலையற்றதன்மையைக் காட்டுகிறது என்று நஸ்ரி குறிப்பிட்டார்.

“அவர்கள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டியதுதானே, என்னாலா இது”, என்றாரவர்.

“இது அவர்கள் (ஹரப்பான்) எந்த முடிவும் எடுக்க முடியாதவர்கள் என்பதைக் காட்டுகிறது”, என்று நஸ்ரி மேலும் கூறினார்.