நேற்று, எஸ்ஆர்சியின் நிதி நகர்வு சுவடுகள் பற்றி கூறப்படும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, 1எம்டிபி விசாரணையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒரு வணிகரை அதிகாரிகள் எப்படி கையாண்டனர் என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி எழுப்பியுள்ளார்.
sprminsider.blogspot.my யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வணிகர் 2015 ஆண்டில் மூன்றே வாரங்களில் ரிம43 மில்லியனை ரொக்க காசோலைகள் வழியாக எடுத்துள்ளார் என்று ரஃபிஸி கூறினார்.
“ஏன் பேங்க் நெகாரா (அந்த வணிகர்) பணச் சலவை செய்ததற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? ரிம43 மில்லியனை ரொக்கமாக மூன்று வார காலத்தில் எடுத்ததை பேங்க் நெகாரா 2015 ஜனவரி தொடக்கத்திலேயே கண்டிருக்க வேண்டும்”, என்று ரஃபிஸி இன்று கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இளைஞரான அந்த வணிகர் டிசம்பர் 31, 2014 இல் 16 ரொக்க காசோலைகள் வழி ரிம8 மில்லியனையும் 2015 இல் ஜனவரி 15 லிருந்து ஜனவரி 20 வரையில் 71 ரொக்க காலோலைகள் வழி ரிம35 மில்லியனையும் எடுத்துள்ளார் என்று ரஃபிஸி கூறிக்கொண்டார்.
இந்தப் பணம் 1எம்டிபியின் துணை நிருவனமான எஸ்ஆர்சி வழியாக பல சுற்றுவழிகளில் இந்த வணிகரிடம் சேர்க்கப்பட்டு பின்னர் ரொக்க காசோலைகள் வழி எடுக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறிக்கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் sprminsider.blogspot.யில் அக்டோபர் 2016 இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தளத்தை அணுக முடியாமல் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சு தடைசெய்துள்ளது.
இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை மலேசியாகினியால் சுயேட்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
ஏன் பேங்க் நெகாரா நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதிகாரப்பூர்வ கட்டளைகள் விதிக்கும் அமைப்பு என்ற முறையில் இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது பேங்க் நெகாராவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
1எம்டிபியை விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு பணிப்படை இல்லாவிட்டாலும், இந்த நபரை பேங்க் நெகாரா 2015 பெப்ரவரி தொடக்கத்திலேயே கைது செய்து இருக்க வேண்டும், அவர் ரிம43 மில்லியனை ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்த சில வாரங்களுக்குப் பின்னர்.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், இப்பணம் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது மற்றும் அந்த நபரின் வியாபாரம் என்ன, எதற்காக ரிம43 மில்லியன் பெற்றார், அந்த ரிம43 மில்லியனை வைத்து என்ன செய்தார் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க இயலாமல் இருப்பது முக்கியமானதாகும்.
பணச் சலவை தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை வழி வருமானம் சட்டம் 2001 (Amla) ஆகியவற்றின் கீழ் இது நிச்சயமாக ஒரு குற்றம் என்று ரஃபிஸி கூறினார்.
இந்த வணிகர் வங்கியிலிருந்து எடுத்த ரிம43 மில்லியனை இறுதியாகப் பெற்றவர் யார் என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி), போலீஸ் மற்றும் பேங்க் நெகாரா வெளிப்படுத்த வேண்டும் என்று ரஃபிஸி வலியுறுத்தினார்.
அடுத்த வாரம், பேங்க் நெகாரவில் ஒரு புகார் செய்யப் போவதாக கூறிய ரஃபிஸி, இவரைப் போன்ற (வணிகரை) ஒருவர் மீது குற்றம் சாட்டுவதன் வழி ரிம43 மில்லியனைப் பெற்றவர் யார் என்று நாம் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
ஹலோ ராபிசி ராம்லி பணம் பாதாளம் வரையும் அல்ல அதற்க்கு மேலும் பாயும்— இது தெரியாதா? இதுதான் MALAYSIA BOLEH .