“பொது ஒழுங்குக்கும் அமைதிக்கும் மருட்டலாக” இருந்த மேலும் ஒரு துருக்கியர் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவரையும் சேர்த்து இதுவரை மூன்று துருக்கியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிநுழைவு அதிகாரியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 40வயதுடைய மூன்றாவது நபர் நேற்று பாகாங், செனோரில் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
புதன்கிழமை காலிட், தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக இருந்த துருக்கியர் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவ்விருவரும் கடத்திச் செல்லப்பட்டதாக அஞ்சப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் குற்றவியல் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, அவ்விருவருக்கும் ஐஎஸ் தொடர்புண்டா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.