பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி), அதன் அதிகாரிகள் சட்டவிரோத வியாபாரிகள்மீதும் சட்டவிரோதமான கட்டுமானங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கும்போது இனம் பார்த்துச் செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. இதன் தொடர்பில் அது சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அப்புள்ளிவிவரங்களின்படி, எம்பிபிபி அதிகாரிகள் இவ்வாண்டில் ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை 305 தனிப்பட்டவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர்களில் 103பேர்(34விழுக்காடு) மலாய்க்காரர்கள், 158 பேர் (52 விழுக்காடு) சீனர்கள், 31பேர் (10 விழுக்காடு) இந்தியர்கள், 13 பேர் (4 விழுக்காடு) இதரர்.
உடைக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களில் மூன்று மலாய்க்காரர்களுடையவை, ஏழு சீனர்களுக்குச் சொந்தமானவை, இந்தியர்களுடையது ஒன்று.
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்குவிடுதிகளுக்கு எதிராகவும் நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்று மலாய்க்காரர்களுடையது, ஐந்து சீனர்களுடையவை. சீனர்களின் நான்கு கேளிக்கை மையங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.