கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தல் என் கடைசித் தேர்தலாக இருக்கலாம்

dapடிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்   லிம்  கிட்  சியாங்   14வது    பொதுத்     தேர்தலே    தம்முடைய   கடைசித்    தேர்தலாக    இருக்கக்  கூடும்   என்று   நினைக்கிறார்.

அவரின்   கேளாங்   பாத்தா   தொகுதியில்    நடைபெற்ற    நிதிதிரட்டு   விருந்து   நிகழ்ச்சியில்    பேசியபோது   அந்த   76-வயது  அரசியல்வாதி   அவ்வாறு   தெரிவித்தார்.

“51 ஆண்டுகள்   அரசியலில்   இருந்து   விட்டேன்.

“அடுத்த    தேர்தல்-   14வது   பொதுத்    தேர்தலே-   என்  கடைசித்   தேர்தலாக    இருக்கும்    என்று   நம்புகிறேன்”,   என்றாரவர்.

“பலரும்   நான்  எங்கு   போட்டியிடுவேன்     என்று    வினவுகிறார்கள்.  என்னுடைய  முதல்    தேர்வு   கேளாங்   பாத்தாதான்.

“ஆனால்  இறுதி  முடிவைக்   கட்சிதான்  செய்ய   வேண்டும்”,  என்றார்.

அவ்விருந்தில்   முன்னாள்   பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்   கலந்து  கொண்டார்.   சிலர்     தாம்   மகாதிருடன்   ஒத்துழைப்பது   ஏனென்றும்   வினவுவதாகவும்  லிம்   குறிப்பிட்டார்.

“என்னையும்  (என் மகன்)  லிம்  குவான்   எங்கையும்    சிறையில்   தள்ளியவர்   மகாதிர்.  அவரோடு  எப்படி   ஒத்துழைக்க   முடியும்    என்று   கேட்கிறார்கள்.

“நம்   நாட்டைக்   காக்க   சொந்த  கருத்துவேறுபாடுகளைத்   தள்ளிவைப்பது   முக்கியம்”,  என்றாரவர்.