வாழ்க்கைச் செலவினம் கூடிக்கொண்டே போவதால் நஜிப்புக்கான அரசு ஊழியர்களின் ஆதரவு சிதைந்து கொண்டிருக்கிறது

 

Maydaynajibமலேசியாவின் 1.6 மில்லியன் பொதுச் சேவை ஊழியர்கள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆளும் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய வாக்கு வங்கியாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது மீண்டும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நஜிப்பின் கூட்டணிக்கு உயர்ந்து கொண்டே போகும் வாழ்க்கைச் செலவினம் அரசு ஊழியர்களின் ஆதரவு படிப்படியாகச் சிதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் குறைக்கப்பட்டதும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தப்பட்டதும் தங்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக சாதாரண அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

28 வயதான முகமட் நிஸாம் கடந்த காலத்தில் அம்னோவை ஆதரித்து வந்துள்ளதாக கூறினார். ஆனால், மீண்டும் ஆதரவு அளிப்பாரா என்று கூறவில்லை. ராய்ட்டரிடம் பேசிய ஒரு டஜன் அரசுத்துறை ஊழியர்கள் இதே நிலையைக் கொண்டிருந்தனர்.

புத்ராஜெயாவில் மாதத்திற்கு ரிம3,000 சம்பளம் பெறும் அரசு சிப்பந்தியான முகமட் நிஸாம், தமக்கு குழந்தை இல்லை. இருந்தால் எப்படி சமாளிக்க முடியும் என்று கேட்டார்.

விலைவாசிகளின் உயர்வின் காரணமாக கடந்த இரு பொதுத் தேர்தல்களில் நகர்புற மலாய்க்காரர் அல்லாதவர்கள் அம்னோவின் தலைமையிலான கூட்டணியை கைவிட்டனர்.

ரிஸால்மான் மொக்தார், ஓர் அடிமட்ட அம்னோ ஆதரவாளர், மொத்த வாக்காளர்களில் 15 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டிருக்கும் அரசு பொதுச் சேவை கட்சிக்கு எதிராகத் திரும்பிவிடக் கூடும் என்று அஞ்சுகிறார்.

வாழ்க்கைச் செலவினம் குறைக்கப்படவில்லை என்றால் அது எங்கள் ஆதரவு மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாரவர்.