ஊழல்தடுப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்க கெரா இயக்கம்: எம்ஏசிசி தொடங்கியது

maccமலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்     தலைமை   ஆணையர்    சுல்கிப்ளி   அஹ்மட் ,   தொழில்   நிறுவனங்கள்       ஊழல்   நடைமுறைகளை   எதிர்நோக்க   நேர்ந்தால்    அவை  குறித்துப்     புகார்   செய்ய   முன்வர   வேண்டும்    என்று   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்     தலைமை   ஆணையர்    சுல்கிப்ளி   அஹ்மட்   வலியுறுத்தினார்.

“மறுப்பு   சொல்வது  மட்டும்   போதாது     எம்ஏசிசி-இடமும்   புகார்   செய்ய    வேண்டும்”. இன்று,   புத்ரா  ஜெயாவில்   ‘ஊழல்தடுப்புப்  புரட்சி   இயக்க(கெரா)’த்தைத்    தொடக்கி    வைத்தபின்னர்    சுல்கிப்ளி    இவ்வாறு   கூறினார்.

தனிப்பட்ட   பலர்   எம்ஏசிசியில்    புகார்    செய்கிறார்கள்    ஆனால்,   பல  நிறுவனங்கள்   அவ்வாறு   செய்வதில்லை  என்றாரவர்.

கெரா    மாதத்துக்கு   ஒரு  முறை   நடைபெறும்  இயக்கம்.  அதில்   ஊழல்    குறித்த   விழிப்புணர்வை   அதிகரிக்க   எம்ஏசிசி   அதிகாரிகள்   மாதத்தின்  முதல்   திங்கள்கிழமை    பொதுமக்களைச்   சந்திப்பார்கள்.